Thursday, March 25, 2010

எனக்கு பிடித்த யேசுதாஸ், ஜெயச்சந்திரன் பாடல்கள்

நான் ரசிச்சு கேட்கிற சில பாடல்கள உங்களோடு பகிரலாம்னு தான்..



படம் : அவள் அப்படித்தான்
இசை : இளையராஜா
பாடல் : உறவுகள் தொடர்கதை..

கொஞ்சம் சோகமா இருந்த இந்த பாட்ட கேட்பேன் ஆறுதலா இருக்கும்.. " உன் நெஞ்சிலே பாரம்.. எதற்காகவோ ஈரம்.. கண்ணீரை நான் மாற்றுவேன்.. வேதனை தீரலாம்.. வெறும் பனி விலகலாம்.. ".



படம் : ஸ்ரீ ராகவேந்திரா
இசை : இளையராஜா
பாடல் : ஆடல் கலையே ..

ராஜாவோட இசைல நான் ரொம்ப விரும்பி கேட்கிற பாடல். யேசுதாஸ் அவ்வளவு அற்புதமா பாடியிருப்பாரு. வீணை மிருதங்கத்த ராஜா அழகா பயன்படுத்தியிருப்பாரு..





படம் : சிந்து பைரவி
இசை : இளையராஜா
பாடல் : பூமாலை வாங்கி..

ராஜா அதிகமா பயன்படுத்துற வாத்தியம் Violin, Flute தான். இந்த பாட்டுல violin, Flute, வீணைய நல்லா பயன்படுத்தியிருப்பாரு.. "நேற்று சபதம் எடுத்துவிட்டான் குடிக்கின்ற கோப்பையை உடைத்துவிட்டான்.. மீண்டும் அவள் முகம் நினைத்து விட்டான் சபதத்தை அவன் இன்று உடைத்துவிட்டான்"
வைரமுத்துன்னு நெனைக்கிறேன்..






படம் : கடலோர கவிதைகள்
இசை : இளையராஜா
பாடல் : கொடியிலே..

ஜானகியோடு இந்த பாட்ட ஜெயச்சந்திரன் பாடியிருப்பாரு.. அருமையான இசை. அழகான வரிகள்.



படம் : மே மாதம்
இசை : ரஹ்மான்
பாடல் : என் மேல் விழுந்த..

சித்ராவுடன் சேர்ந்து பாடியிருப்பார் ஜெயச்சந்திரன். மென்மையான பாடல்.



படம் : பென்பட(1975)
இசை : R.K.Shekar, A.R.Rahman
பாடல் : வெள்ளித்தேன் கிண்ணம் போல்..

ஜெயச்சந்திரன் பாடிய இந்த மலையாள பாடலை, ரஹ்மான் தன் 9 வயதில் அப்பாவோடு சேர்ந்து இசையமைத்தார்னு சொல்லுறாங்க.. நம்புவோமாக..

Wednesday, March 10, 2010

என்னை தாக்கிய புயல் - I

90'களில் ரஹ்மான் தன் இசைப் பயணத்தை தொடங்கிய போது அவரிடம் அனுபவமாக இருந்தது, இளையராஜாவிடம் கொஞ்ச காலம் Keyboard வாசித்தது. 84-88 வருடங்களில் நண்பர்களுடன் சேர்ந்து 'Roots', 'Magic' ஆகிய band இல் இணைந்து இசையமைத்தது. Tantex, MRF, Leo Coffee போன்ற விளம்பரங்களுக்கு இசையமைத்ததுவே.



70 களின் தொடக்கத்தில் நுழையவே முடியாத மலையாள இசை உலகத்தில் போராடி நுழைந்து, அந்த காலத்திலேயே நல்ல வாத்தியங்களை பயன்படுத்தி பாடல்களை தந்தவர் ரஹ்மானின் தந்தையார் R.K.Shekar. அவரின் ஆசிர்வாதமும் ரஹ்மானின் அயராத உழைப்பும் தான் இன்று அவரிடம் வரிசைகட்டிகொண்டு விருதுகள் வரக்காரணம்.



1992 ஆம் ஆண்டு தமிழில் ரோஜா படத்தின் மூலம் ரஹ்மானை மணிரத்னம் அறிமுகப்படுத்தினார். சின்ன சின்ன ஆசை என்று அறிமுகமான முதல் படத்திலே தேசிய விருது வாங்கியவர் ரஹ்மான்.

உன்னி கிருஷ்ணன், சாகுல் ஹமிது, ஸ்ரீனிவாஸ், ஹரிணி என்று இவர் அறிமுகப்படுத்திய பாடகர்கள் ஏராளம். ஹரிஹரன், உன்னி மேனன், சங்கர் மகாதேவன் போன்ற சிறந்த பாடகர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த பெருமையும் ரஹ்மானையேச் சேரும்.



Rangeela படத்தில் வரும் Pyar Ye Jaane என்ற பாடலை பாடிய மராத்திய பாடகர் Suresh Wadkar முதல் ஆரோமலே பாடிய மலையாள பாடகர் Alphons Joseph வரை நான் ரசித்த ரஹ்மான் பாடல்களையும், பாடகர்களையும் பற்றி பகிரவே இந்த பதிவு.

இந்த பதிவில் யேசுதாஸ், ஜெயச்சந்திரன் மற்றும் ஹரிஹரன் பாடிய பாடல்கள்.



ரஹ்மானின் இசையில் யேசுதாஸ் சில பாடல்களைப் பாடியது நிச்சயம் ரஹ்மானுக்கு பெருமை தான். "வெண்ணிலாவின் தேரில் ஏறி", "பச்சை கிளிகள் தோளோடு", "நெஞ்சே நெஞ்சே", "கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா"ணு நல்லாவே பாடியிருப்பாரு..

எனக்கு சில பாடல்களை கேட்கும் போது இந்த பாட்ட பாடுறவரு ஜெயச்சந்திரனா இல்ல யேசுதாஸான்னு குழப்பமா இருக்கும். இவரோட voice எனக்கு ரொம்ப பிடிக்கும். மே மாதம் படத்தில் வரும் "என் மேல் விழுந்த மழைத்துளியே" பாடலை சித்ராவுடன் பாடியிருப்பார். "கொல்லையில தென்னை வைத்து", "கத்தாளங் காட்டு வழி கல்லுபட்டி", "ராஜ்யமா இல்லை இமயமா", "ஒரு தெய்வம் தந்த பூவே"ன்னு நல்ல பாடல்கள பாடி இருக்காரு.

வித்யாசாகர் மூலம் தமிழுக்கு அறிமுகமான ஹரிஹரன் சொல்லிக்கொள்ளும் படிய அமைந்த முதல் பாடல் ரோஜா படத்தில் வரும் "தமிழா தமிழா நாளை நம் நாடே". சாதனா சர்கமுடன் இணைந்து பாடிய "உதயா உதயா உளறுகிறேன்", " வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணை தாண்டி வருவாயா". அனுராதா ஸ்ரீராமுடன் பாடிய "அன்பே அன்பே கொள்ளாதே". சித்ராவுடன் பாடிய "மலர்களே மலர்களே இது என்ன கனவா", ஹரிணியுடன் பாடிய "டெலிபோன் மணிபோல் சிரிப்பவள்" என்று ஹரிஹரனுடைய பட்டியல் கொஞ்சம் நீளம் தான்.

ரஹ்மானின் இசையில் Delhi 6 படத்தில் வரும் Masakali Masakali பாடல் உங்கள் பார்வைக்கு.



அடுத்த பதிவில் SPB, உன்னி கிருஷ்ணன், சாகுல் ஹமிது, ஹரிணி பாடிய ரஹ்மான் பாடல்கள்.

விரைவில்:

"ஒயிலா பாடும் பாட்டுல" என்ற பாடலுக்கு ஆதித்யனுடன் இசையமைத்தவர். காதல் தேசம் முதல் பல படங்களுக்கு ரஹ்மானிடம் உதவியாளராக இருந்தவர், இன்று பலருடைய Caller Tune னாக இருப்பது இவருடைய சிறந்த பாடல்களே. "என்னை தாக்கிய மின்னல்" விரைவில்...

Saturday, March 6, 2010

விண்ணைத்தாண்டி வருவாயா - திரை விமர்சனம்



கௌதம் மேனன் படத்துல கதாநாயகன் கதைய அழக Narrate பண்ணி பார்வையாளர்கள பத்து நிமிசத்துல கதைல ஒன்ற வச்சிடுவாரு. அதே மாதிரி ஹீரோ ஹீரோயின பார்த்த அடுத்த நொடியே (Love at first sight) உருகி பாட ஆரம்பிச்சிடுவாரு. அழகிய தீயே என்னை.. முன்தினம் பார்த்தேனே.. VTV'ல "ஏன் இதயம் உடைத்தாய் நொறுங்கவே என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே Hosana". இது அவரோட ஸ்டைல்.

A.R.Rahman னோட கிடார் மியூசிக்கோடு.. மனோஜ் பரமஹம்ச கேமராவின் வழியில்.. காதல் நம்மள போட்டு தாக்கனும் தலைகிழ திருப்பனும் நிலைய இருக்கணும் அது தான் லவ்னு நம்ம ஹீரோ Narrate பண்ணி ஆரம்பமாகுது படம்.

ஜெஸ்ஸியா த்ரிஷா, இந்த கேரக்டர் பற்றி சொல்லனும்ன.. பொதுவா பசங்களுக்கு பொண்ணு அழகா இருந்த இவ நம்ம Life fullல இருந்த எப்படி இருக்கும்னு தான் நினைப்பாங்க ஆனா பொண்ணுங்க Calculative mind'டோடு தான் இருப்பாங்க. இருக்கணும். கார்த்திக்கா சிம்பு Asst. Director'a நடிச்சிருக்கார்.

தெளிஞ்ச நீரோடைய போற ஜெஸ்ஸி வாழ்கையில கார்த்திக் வர்றான். உன்னை எனக்கு புடிச்சிருக்கு ஆனா எனக்கு வேண்டாம். நாம ஒன்னு சேர மாட்டோம். இந்த காதல் தோல்வில தான் முடியும்னு ஜெஸ்ஸி சொல்லியும் கார்த்திக் தொடர்ந்து தன்னுடைய காதல்ல வெற்றி பெற முயற்ச்சி செய்றாரு. காதலில் வெற்றி பெற்றாரா. குழப்பமான மனநிலையில் இருந்த ஜெஸ்ஸி தன் காதலனுக்காக வீட்டை தாண்டி வந்தாரா. Climax'ல ஜோடி சேர்ந்துச்சான சேர்ந்துச்சு ஆனா அது எந்த ஜோடின்னு வெண்திரையில பாருங்க..

படத்தில் என்னை கவர்ந்தவை:

குழப்பமே இல்லாம நூல் புடிச்சாப்ள சொல்லிருக்கும் கதை. சொன்னவிதம்.

பார்வையாளனின் கண்களை உறுத்தாத கேமரா கோணம். ஈரம் படத்துல்ல வாங்குன நல்ல பேர தக்க வச்சுகிட்டார்.

சிம்பு, த்ரிஷா நடிப்பு.

தாமரையின் பாடல் வரிகளுக்கு ரஹ்மானின் அற்புதமான இசை.

ஹோசன, ஓமணப்பெண்ணே பாடலும் படமாக்கிய விதமும் (Train Episode). த்ரிஷாவ ரொம்ப அழகா காட்டியிருப்பாங்க.

ஸ்ரேயா கோஷல், ரஹ்மான் பாடிய " ஒரு நாள் சிரித்தேன் மறுநாள் வெறுத்தேன் உனை நான் கொள்ளாமல் கொன்று புதைத்தேன் மன்னிப்பாயா.. உனை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன் " அந்த situation 'னுக்கு தேவையான feel கொடுத்தது.

ஆரோமலே ரொம்ப எதிர்பார்த்தேன். It's ok.

ரஹ்மானின் பின்னணி இசையும் ஆங்காங்கே ஹைக்கூ கவிதை போல வரும் வசனங்களும் படத்திற்கு இன்னும் அழகு..

சிம்பு: உன்ன ட்ரைன்ல பார்த்த உடனே friendsa நாம இருப்போம்னு சொன்னதெல்லாம் உடைஞ்சு போச்சு.. This is love.. I am crazy about you.. and mad about you.. இந்த சீன் ரொம்ப நல்ல எடுத்திருப்பாரு..

த்ரிஷா: உன் கண் வழிய என்ன யாரும் பார்க்கல போல..

சிம்பு: எதாவது புடிக்கலனா வேம நடந்து போயிடுவ அவள front'ட விட back'ல தான் அதிக தடவ பார்த்திருக்கேன். Theatrela என்ன புரிஞ்சாங்கனு தெரியல அந்தக் கத்து..

சிம்பு: இப்ப கூட எல்லாம் முடிஞ்சு போச்சுன்னு நினைச்சேன்.. நினைக்காத எல்லாம் முடிஞ்சு தான் போச்சுன்னு சொன்னா.

சிம்பு: காதல் ஒரு வலி. தேடி போய் யாரையும் லவ் பண்ண முடியாது அதுவா நடக்கணும் நம்ம போட்டு தாக்கனும். ஆரம்பத்தில வந்த அதே வரிகளோடும், நம் இதயத்தில் கொஞ்சம் வலிகளோடும் படம் நிறைவாகும்.

வாழ்த்துக்கள் கெளதம் மேனன்.