
70 களின் தொடக்கத்தில் நுழையவே முடியாத மலையாள இசை உலகத்தில் போராடி நுழைந்து, அந்த காலத்திலேயே நல்ல வாத்தியங்களை பயன்படுத்தி பாடல்களை தந்தவர் ரஹ்மானின் தந்தையார் R.K.Shekar. அவரின் ஆசிர்வாதமும் ரஹ்மானின் அயராத உழைப்பும் தான் இன்று அவரிடம் வரிசைகட்டிகொண்டு விருதுகள் வரக்காரணம்.

1992 ஆம் ஆண்டு தமிழில் ரோஜா படத்தின் மூலம் ரஹ்மானை மணிரத்னம் அறிமுகப்படுத்தினார். சின்ன சின்ன ஆசை என்று அறிமுகமான முதல் படத்திலே தேசிய விருது வாங்கியவர் ரஹ்மான்.
உன்னி கிருஷ்ணன், சாகுல் ஹமிது, ஸ்ரீனிவாஸ், ஹரிணி என்று இவர் அறிமுகப்படுத்திய பாடகர்கள் ஏராளம். ஹரிஹரன், உன்னி மேனன், சங்கர் மகாதேவன் போன்ற சிறந்த பாடகர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த பெருமையும் ரஹ்மானையேச் சேரும்.

Rangeela படத்தில் வரும் Pyar Ye Jaane என்ற பாடலை பாடிய மராத்திய பாடகர் Suresh Wadkar முதல் ஆரோமலே பாடிய மலையாள பாடகர் Alphons Joseph வரை நான் ரசித்த ரஹ்மான் பாடல்களையும், பாடகர்களையும் பற்றி பகிரவே இந்த பதிவு.
இந்த பதிவில் யேசுதாஸ், ஜெயச்சந்திரன் மற்றும் ஹரிஹரன் பாடிய பாடல்கள்.

ரஹ்மானின் இசையில் யேசுதாஸ் சில பாடல்களைப் பாடியது நிச்சயம் ரஹ்மானுக்கு பெருமை தான். "வெண்ணிலாவின் தேரில் ஏறி", "பச்சை கிளிகள் தோளோடு", "நெஞ்சே நெஞ்சே", "கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா"ணு நல்லாவே பாடியிருப்பாரு..
எனக்கு சில பாடல்களை கேட்கும் போது இந்த பாட்ட பாடுறவரு ஜெயச்சந்திரனா இல்ல யேசுதாஸான்னு குழப்பமா இருக்கும். இவரோட voice எனக்கு ரொம்ப பிடிக்கும். மே மாதம் படத்தில் வரும் "என் மேல் விழுந்த மழைத்துளியே" பாடலை சித்ராவுடன் பாடியிருப்பார். "கொல்லையில தென்னை வைத்து", "கத்தாளங் காட்டு வழி கல்லுபட்டி", "ராஜ்யமா இல்லை இமயமா", "ஒரு தெய்வம் தந்த பூவே"ன்னு நல்ல பாடல்கள பாடி இருக்காரு.
வித்யாசாகர் மூலம் தமிழுக்கு அறிமுகமான ஹரிஹரன் சொல்லிக்கொள்ளும் படிய அமைந்த முதல் பாடல் ரோஜா படத்தில் வரும் "தமிழா தமிழா நாளை நம் நாடே". சாதனா சர்கமுடன் இணைந்து பாடிய "உதயா உதயா உளறுகிறேன்", " வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணை தாண்டி வருவாயா". அனுராதா ஸ்ரீராமுடன் பாடிய "அன்பே அன்பே கொள்ளாதே". சித்ராவுடன் பாடிய "மலர்களே மலர்களே இது என்ன கனவா", ஹரிணியுடன் பாடிய "டெலிபோன் மணிபோல் சிரிப்பவள்" என்று ஹரிஹரனுடைய பட்டியல் கொஞ்சம் நீளம் தான்.
ரஹ்மானின் இசையில் Delhi 6 படத்தில் வரும் Masakali Masakali பாடல் உங்கள் பார்வைக்கு.
அடுத்த பதிவில் SPB, உன்னி கிருஷ்ணன், சாகுல் ஹமிது, ஹரிணி பாடிய ரஹ்மான் பாடல்கள்.
விரைவில்:
"ஒயிலா பாடும் பாட்டுல" என்ற பாடலுக்கு ஆதித்யனுடன் இசையமைத்தவர். காதல் தேசம் முதல் பல படங்களுக்கு ரஹ்மானிடம் உதவியாளராக இருந்தவர், இன்று பலருடைய Caller Tune னாக இருப்பது இவருடைய சிறந்த பாடல்களே. "என்னை தாக்கிய மின்னல்" விரைவில்...
5 comments:
ராஜ் அருமை .... நெனச்சதுமாறியே நொறுக்கிட்டே.... படங்கள் மிக அருமை... இன்னும் நெறைய எதிர்பாக்குறேன்...
"என்னை தாக்கிய மின்னல்" - is it about HARRIS JAYARAJ? am i correct?
அருமை நண்பரே உங்கலுக்கு செந்தில்குமாரின் வணக்கங்கள்........
அருமை நண்பரே...
நன்றி சிவராஜ், ஷாஜி, செந்தில்குமார், டக்கால்டி
@ஷாஜி
"என்னை தாக்கிய மின்னல்" - is it about HARRIS JAYARAJ? am i correct?
Harris தான்.
Post a Comment