Sunday, April 25, 2010

எனக்கு பிடித்த பாடல் - I



சில பாடல்கள கேட்காமல் இருந்திருப்போம், இந்த பாட்ட கேட்டதில்லையானு நண்பர்கள் ரசித்து விமர்சிக்கும் போது பாடல்களை உடனே கேட்டு பார்ப்போம். பிடித்திருந்த நாலு பேருக்கு நாமும் அந்த பாட்ட கேட்க சொல்லுவோம். இசை ரசிகர்களிடம் இது பொதுவாக இருக்கும்.

ராகதேவன் இளையராஜா இசையில் எனக்கு பிடித்த பாடல்களை பகிரவே இந்த தொடர்பதிவு. பண்ணபுரத்துக்காரர் பாடல டாப் 10, டாப் 1 ன்னு வரிசை படுத்துறது ரொம்ப சிரமமான காரியம். அதனால நான் வரிசை படுத்தல தொடர்பதிவ எழுதலாம்னு இருக்கேன்..


படம் : காதல் ஓவியம்
பாடல் : சங்கீத ஜாதிமுல்லை..
பாடியவர் : SPB
பாடலாசிரியர் : வைரமுத்து

ஒரு பாடலின் வெற்றிக்கு இசையமைப்பாளரின் மெனக்கெடல் ரொம்ப முக்கியமானது. அதே சிரத்தை பாடலாசிரியரிடமும், பாடியவரிடமும், படமாக்கியவரிடமும், நடித்தவர்களிடமும் காண பெற்றால்.. இந்த பாடலில் அமைந்தது அதுவே, வைரமுத்து இதுவரை எழுதிய பாடல்களில் அதிக நேரம் எடுத்துக்கொண்டது இந்த பாடலுக்கே ( எட்டு மணிநேரம் ). இந்த பாடலில் வரும் வரிகளுக்கு ஏற்றார்போல் உணர்ச்சி ததும்ப பாடியிருப்பார் பாலசுப்ரமணியம். இந்த பாடலில் நடித்திருக்கும் நடிகர் சிறந்த முறையில் பாடலுக்கு வாயசைத்திருப்பார். ராதாவின் நடிப்பும். பாரதிராஜாவின் இயக்கமும் சிறப்பாக இருக்கும்.


இந்த பாடலின் வரிகள்

நம்தம்த நம்தனம்தம் நம்தனம்தம்
நம்தனம்தம் நம்தனம்தம் நம்தனம்தம்
நம்தம்த நம்தம் நம்தம்த நம்தம்
நம்தம்த நம்தம் நம்தம்த நம்தம்
என் நாதமே வா வா..

சங்கீத ஜாதிமுல்லை காணவில்லை
கண்கள் வந்தும் பாவையின்றி பார்வையில்லை
ராகங்களின்றி சங்கீதமில்லை
சாவொன்றுதானா நம் காதல் எல்லை
என் நாதமே வா வா...

சங்கீத..

திருமுகம் வந்து பழகுமோ அறிமுகம் செய்து விலகுமோ
விழிகளில் துளிநீர் வழியுமோ அது பிரிவதைத் தாங்க முடியுமோ
கனவினில் எந்தன் உயிரும் உறவாகி விழிகளில் இன்று அழுது பிரிவாகி
தனிமையில் எந்தன் இதயம் சருகாகி உதிருமோ
திரைகள் இட்டாலும் மறைந்து கொள்ளாது
அணைகள் இட்டாலும் வழியில் நில்லாது
பொன்னி நதி கன்னி நதி ஜீவா நதி
விழிகள் அழுதபடி கரங்கள் தொழுதபடி
சிறைகளும் பொடிபட வெளிவரும் ஒருகிளி
இசை எனும் மழை வரும் இனி எந்தன் மயில் வரும்
ஞாபக வேதனை தீருமோ
ஆடிய பாதங்கள் காதலின் வேதங்கள் ஆகிடுமோ ஆடிடுமோ பாடிடுமோ
ராஜ தீபமே எந்தன் வாசலில் வாராயோ
குயிலே.. குயிலே..
குயிலே.. குயிலே..
உந்தன் ராகம் நெஞ்சில் நின்று ஆடும்
ராஜ தீபமே..

நான் தேடி வந்த ஒரு கோடை நிலவு அவள் நீதானே நீதானே
மனக் கண்ணில் நின்று பல கவிதை தந்தமகள் நீதானே நீதானே நீதானே
விழி இல்லை எனும்போது வழி கொடுத்தாய்
விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்

விழி இல்லை..

நெஞ்சில் என்றும் உந்தன் பிம்பம்
சிந்தும் சந்தம் உந்தன் சொந்தம்
தத்திச்செல்லும் முத்துச் சிற்பம் கண்ணுக்குள்ளே கண்ணீர் வெப்பம்
இன்னும் என்ன நெஞ்சில் அச்சம் கண்ணில் மட்டும் ஜீவன் மிச்சம்
முல்லைப் பூவில் முள்ளும் உண்டோ கண்டுகொண்டும் இந்த வேஷமென்ன
ராக தீபமே..




இந்த பாடலை இதுவரை ரசித்து கேட்காதவர்கள் ஒருமுறை இந்த இடத்தில் கேட்டு பாருங்கள்

பொன்னி நதி கன்னி நதி ஜீவா நதி
விழிகள் அழுதபடி கரங்கள் தொழுதபடி
திரைகளும் பொடிபட வெளிவரும் ஒருகிளி
இசை எனும் மழை வரும் இனி எந்தன் மயில் வரும்
ஞாபக வேதனை தீருமோ
ஆடிய பாதங்கள் காதலின் வேதங்கள் ஆகிடுமோ ஆடிடுமோ பாடிடுமோ
ராஜ தீபமே எந்தன் வாசலில் வாராயோ
குயிலே.. குயிலே..

இப்போ வரும் அந்த violin இசை கண்டிப்பா உங்கள உருக வச்சிடும்.





படம் : கரும்பு வில்
பாடல் : மீன்கொடி தேரில்..
பாடியவர் : ஜேசுதாஸ், ஜென்சி
பாடலாசிரியர் : புலமைபித்தன்*

இந்த பாடலின் சிறப்பே ராஜாவோட tune தான். சில நல்ல பாடல்கள் எந்த படத்தில இருந்து வந்தது, யார் நடிச்சதுனு தெரியாமலே இருக்கும். அந்த லிஸ்ட்ல இருக்கும் பாடல் இது.

" மீன்கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்
மீன்கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்
ரதியோ விதியின் பிரிவில் மதனோ ரதியின் நினைவில்
உறவின் சுகமே இரவே தருமே
காதலர் தேவனின் பூஜையில் நாளினில்.. "




படம் : பகல் நிலவு
பாடல் : வாராயோ வான்மதி..
பாடியவர் : ரமேஷ், வாணி ஜெயராம்*
பாடலாசிரியர் : வாலி*

இந்த பாடலை பாடியிருப்பவர் ரமேஷ். பொதுவா இந்த மாதிரி பாடல நம்ம SPB சூப்பரா பாடுவாரு. இந்த பாட்டுல ரெண்டாவது சரணத்தில "நானும் பாடும் பாடலே காதில் கேட்கவில்லையோ இல்லையோ.." னு வாணி ஜெயராம்* பாடிருப்பாங்க. அவங்களோட குரல் ரொம்ப நல்ல இருக்கும். ராஜா violin, Flute, தபேலாவ அருமையா பயன்படுத்தியிருப்பார். அருமையான பாடல் கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும்.




சங்கீத ஜாதிமுல்லை பாடல் பார்வைக்கு


Friday, April 16, 2010

என்னை தாக்கிய புயல் - II



ரஹ்மான் இசைல வெளிவந்த சில படங்கள் தோல்வி அடைஞ்சிருக்கலாம். ஆனாலும் அந்த படத்தில வர்ற சில பாடல்கள் இன்னும் நம்மள முனுமுனுக்க வைக்கறதே ரஹ்மானோட வெற்றி தான். பவித்ரா படத்தில் வரும் "செவ்வானம் சின்னப்பெண்.." புதிய மன்னர்கள் படத்தில் வரும் " நீ கட்டும் சேல.." புதிய முகம் படத்தில் வரும் " கண்ணுக்கு மை அழகு.." வண்டிசோழை சின்ராசு படத்தில் வரும் " இது சுகம் சுகம்.." லவ் birds படத்தில வரும் " மலர்களே மலர்களே.. " ஏன் இப்போ வந்த சக்கரகட்டி "மருதாணி.." பாட்டு வர்ற, ரஹ்மான் இசையமைத்த பாடல்கள் ரசிக்கும் படியாத்தான் இருக்கும். ( பரசுராம், அல்லி அர்ஜுனா படத்தில கூட ஒன்னு ரெண்டு பாட்டு தேறும் ).

இந்த பதிவில் ரஹ்மான் இசையில் சாகுல் ஹமீது, S.P.பாலசுப்ரமணியம், உன்னி கிருஷ்ணன், M G ஸ்ரீகுமார் பாடிய பாடல்கள்.

சாகுல் ஹமீது
-------------



சாகுல் ஹமீது கார் accident ல இறந்த போது ரஹ்மான் ரொம்பவும் வருத்தப்பட்டார்னு கேள்விபட்டுருக்கேன். தொடர்ந்து 93-94 வருசத்துல்ல ரஹ்மான் இசையமைத்த படங்களுக்கு நல்ல பாடல்கள பாடியிருக்காரு சாகுல் ஹமீது. ஜென்டில்மேன் படத்தில "உசிலம்பட்டி பெண்குட்டி..", திருடா திருடா படத்தில " ராசாத்தி ஏன் உசுரு..", வண்டிசோலை சின்ராசு படத்தில " செந்தமிழ் நாட்டு தமிழச்சியே..", உழவன் படத்தில " மாரி மழை பெய்யாதோ..", மே மாதம் படத்தில " மெட்ராஸ சுத்தி காட்ட..", கிழக்கு சீமையிலே படத்தில " எதுக்கு பொண்டாட்டி..", கருத்தம்மா படத்தில " பச்சைக்கிளி பாடும்.. " பாடியிருந்தார்.

மாரி மழை பெய்யாதோ


S.P.பாலசுப்ரமணியம்
-------------------



சமிபத்துல நடந்த ஒரு பாராட்டு விழாவுல " ரஹ்மான எனக்கு 30 வருசமா தெரியும். அப்போ எப்படி இருந்தாரோ அப்படி தான் இப்பவும் இருக்காருன்னு" SPB சொல்லிருப்பாரு. ரஹ்மானுக்கு SPB நிறைய நல்ல பாட்டு பாடியிருக்காரு. எனக்கு பிடித்த சில பாடல்கள்.. " காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே..", " மின்னலே நீ வந்ததேனடி என் கண்ணிலே..", " தொட தொட மலர்ந்ததென்ன பூவே ", " என் காதலே என் காதலே என்னை என்ன செய்ய..", " என்னை காணவில்லையே நேற்றோடு..", " காதலென்னும் தேர்வெழுதி..", " வெள்ளி மலரே வெள்ளி மலரே.. ".

என் காதலே என் காதலே


உன்னி கிருஷ்ணன்
-----------------



முதல் பாடலான "என்னவளே அடி என்னவளே.." பாட்டுக்கு தேசிய விருது வாங்கியவர் உன்னி கிருஷ்ணன். இவர் வாய் வச்ச " சோனியா சோனியா.. " பீட் சாங் கூட Melody யா தான் கேட்குது. அவ்வளவு இனிமையான குரல் இவருடையது. " காற்றே என் வாசல் வந்தாய்..", " தென்றலே தென்றலே..", " தென்மேற்கு பருவ காற்று..", " ரோஜா ரோஜா .. ", " மார்கழி திங்கள்..", " பூவுக்குள் ஒளிந்திருக்கும்.." , " காலையில் தினமும் கண்விழித்தால்..". எல்லாம் Sweet Melodies.

என்னவளே அடி என்னவளே


M G ஸ்ரீகுமார்
-----------



பிரபல மலையாள பாடகரான M G ஸ்ரீகுமார், ரஹ்மானோட இசைல என் சுவாச காற்றே படத்தில " சின்ன சின்ன மழை துளியை.." பாடல பாடியிருப்பாரு. தாஜ் மஹால் படத்தில வர்ற " கரிசல் தரிசில் " பாட்ட சித்ராவோடு சேர்ந்து செமயா பாடியிருப்பாரு. தாஜ் மஹால் படம் ரிலீஸ் ஆனா நேரம் இந்த பாட்டுல வர்ற " மேகாத்து மூலயில மேகமில்ல மின்னலில்ல பூமி நெனஞ்சிருக்கு" பீட்டு தான் Advertisment ல வரும்.

கரிசல் தரிசில்



"என்னை காணவில்லையே நேற்றோடு.." வீடியோ பாடல்




Wednesday, April 14, 2010

சங்கத்தில் பாடாத கவிதை - ஆட்டோ ராஜா (1982 )




2006 -2007 ஆம் ஆண்டு சென்னைல வேலை இல்லாம சுத்திகிட்டு இருந்த காலத்துல ஆறுதலா இருந்தது இளையராஜாவோட பாடல்கள் தான்.. இரவு எல்லா பன்பலையிலும் நம்ம ராஜாவோட பாட்டு தான் விதவிதமான வர்ணனைகளோடு பாடிட்டிருக்கும். அப்படி ஒரு நாள் கேட்ட பாடல் தான் "சங்கத்தில் பாடாத கவிதை". ராஜா இந்த பாட்ட ஜெயா டிவி concert ல ஹம் பண்ணிருப்பாரு. ஸ்கூல் படிக்கும் போது நண்பர்களோடு பாட்டு புஸ்த்தகம், பாட்டுக்கு பாட்டுனு பாடலோடே இருந்ததுனால படம் பேரு ஆட்டோ ராஜான்னு கண்டு பிடிச்சிட்டேன்.


நானும் அண்ணனும் இந்த பாட்ட டவுன்லோட் பண்ணலாம்னு தேடுதல் வேட்டைல Google ல இறங்குனோம். ஆட்டோ ராஜான்னு போட்டா ஏதோ சிரஞ்சீவி படம் வருது. ஒவ்வொரு நேரம் பண்பலைல "சங்கத்தில் பாடாத.." ராஜா குரல் வந்தவுடனே, என்னோட 6600 போண்டா செட்ல ரெகார்ட் பண்ணி வச்சிக்கிருவேன். கேட்டு பாப்பேன் ஒரே இரைச்சல இருக்கும். இப்படி சில நாள் போச்சு.

Youtube ல எனக்கு அக்கௌன்ட் இருந்தது. அப்பப்ப எதாவது நல்ல video songs டவுன்லோட் செஞ்சுக்குவேன். Youtube லையும் நம்ம பாட்டு இல்லை. கொஞ்சம் site ல தமிழ் வீடியோ songs, லொள்ளு சபா எல்லாம் இருந்தது. நமக்கு தேவையான சரக்கும் அங்க இருந்துச்சு ஒடனே லவட்டிகிட்டு வந்திட்டேன். யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்னு Youtube ல upload பண்ணிட்டேன். நான் google ல தேடும் போது பயன்படுத்தினதே "சங்கத்தில் பாடாத கவிதை - ஆட்டோ ராஜா (1982 )" Title ல கொடுத்தேன். இந்த ரெண்டரை வருசத்துல 131000 க்கும் அதிகம் பேர் பார்த்திருக்காங்க.




இசை : இளையராஜா
கவிஞர்: புலமைபித்தன்*
பாடியவர்கள்: இளையராஜா, S .ஜானகி


தமிழ் சங்கத்தில் பாடாத கவிதை - இதை
அங்கத்தில் யார் தந்தது
சந்தத்தில் மாறாத நடையுடன் என் முன்னே யார் வந்தது

கை என்றே செங்கந்தல் மலரை
நீ சொன்னால் நான் நம்பவோ
கால் என்றே செவ்வாழை இணைகளை
நீ சொன்னால் நான் நம்பிவிடவோ
மை கொஞ்சம்
பொய் கொஞ்சம்
கண்ணுக்குள் நீ கொண்டு வருவாய்
காலத்தால் மூவாத உயர் தமிழ்

அந்திபோர் காணாத இளமை
ஆடட்டும் என் கைகளில்
சிந்தித்தேன் செந்தூர இதழ்களில்
சிந்தித்தேன் பாய்கின்ற உறவை

அந்திபோர்..
கண்ணுக்குள் என்னென நளினம்
காலத்தால் மூவாத உயர் தமிழ்

ஆடை ஏன் உன்மேனி அழகை
ஆதிக்கம் செய்கின்றது
நாளைக்கே ஆனந்த விடுதலை
காணட்டும் காணாத உறவில்
கை தொட்டும் மெய் தொட்டும்
காமத்தில் தூங்கத விழியும்
சந்திப்பில் என்னென்ன நயம் தமிழ்

சங்கத்தில் பாடாத..

Wednesday, April 7, 2010

வைரமுத்துவின் கவிதையே பாடலாக

2004 ஆம் ஆண்டு வெளியான வைரமுத்துவின் கவிதையே பாடலாக இசைத்தொகுப்பில் எனக்கு பிடித்த இரண்டு கவிதை பாடல்களை உங்களுக்காக Upload செய்துள்ளேன்.




கவிதை : மரம்
கவிதை குரல் : வைரமுத்து
இசை : இனியவன்
பாடியவர்கள் : SPB, S.ஜானகி

இந்த கவிதையில் எனக்கு பிடித்த வரிகள்

" பிறந்தோம் தொட்டில் மரத்தின் உபயம்
நடந்தோம் நடைவண்டி மரத்தின் உபயம்
எழுதினோம் பென்சில் பலகை மரத்தின் உபயம்
மணந்தோம் மாலை சந்தனம் மரத்தின் உபயம்
கலந்தோம் கட்டில் என்பது மரத்தின் உபயம்
இறந்தோம் சவப்பெட்டி பாடை மரத்தின் உபயம்
எறிந்தோம் சுடலை விறகு மரத்தின் உபயம்
மரந்தான் மரந்தான் எல்லாம் மரந்தான்
மறந்தான் மறந்தான் மனிதன் மறந்தான் "






கவிதை : இலையில் தங்கிய துளிகள்
கவிதை குரல் : வைரமுத்து
இசை : இனியவன்
பாடியவர்கள் : SPB

இந்த கவிதையில் எனக்கு பிடித்த வரிகள்

" நகரா மரங்கள் நகர்வதாகவும் நகரும் வாகனம்
நிலைகொண்டிருப்பதாகவும் நீளப்பொய் சொல்கிறது நெடுஞ்சாலை.."

" காலம் தன் சவுக்கை பூக்கள் மீது சொடுக்காமல் இருக்கலாம்"

"பூச்சரமிட்ட புகைப்படம் சொல்லியது உன் அம்மாவின் மரணம்
சரத்தின் சருகு சொல்லியது உன் பொருளாதாரம்"

"கார் கதவு சாத்த வந்த கணவன் சொன்னான்..
"நீங்களே அவளுக்கு தாலி கட்டியிருக்கலாம்"
உன் போல் பெண்மக்கள் ஊருலகில் எத்தனையோ
காதல் உற்ற செய்தியை காதலனுக்கு சொல்லாமல்
கணவற்கு சொன்னவர்கள்"