Sunday, April 25, 2010

எனக்கு பிடித்த பாடல் - I



சில பாடல்கள கேட்காமல் இருந்திருப்போம், இந்த பாட்ட கேட்டதில்லையானு நண்பர்கள் ரசித்து விமர்சிக்கும் போது பாடல்களை உடனே கேட்டு பார்ப்போம். பிடித்திருந்த நாலு பேருக்கு நாமும் அந்த பாட்ட கேட்க சொல்லுவோம். இசை ரசிகர்களிடம் இது பொதுவாக இருக்கும்.

ராகதேவன் இளையராஜா இசையில் எனக்கு பிடித்த பாடல்களை பகிரவே இந்த தொடர்பதிவு. பண்ணபுரத்துக்காரர் பாடல டாப் 10, டாப் 1 ன்னு வரிசை படுத்துறது ரொம்ப சிரமமான காரியம். அதனால நான் வரிசை படுத்தல தொடர்பதிவ எழுதலாம்னு இருக்கேன்..


படம் : காதல் ஓவியம்
பாடல் : சங்கீத ஜாதிமுல்லை..
பாடியவர் : SPB
பாடலாசிரியர் : வைரமுத்து

ஒரு பாடலின் வெற்றிக்கு இசையமைப்பாளரின் மெனக்கெடல் ரொம்ப முக்கியமானது. அதே சிரத்தை பாடலாசிரியரிடமும், பாடியவரிடமும், படமாக்கியவரிடமும், நடித்தவர்களிடமும் காண பெற்றால்.. இந்த பாடலில் அமைந்தது அதுவே, வைரமுத்து இதுவரை எழுதிய பாடல்களில் அதிக நேரம் எடுத்துக்கொண்டது இந்த பாடலுக்கே ( எட்டு மணிநேரம் ). இந்த பாடலில் வரும் வரிகளுக்கு ஏற்றார்போல் உணர்ச்சி ததும்ப பாடியிருப்பார் பாலசுப்ரமணியம். இந்த பாடலில் நடித்திருக்கும் நடிகர் சிறந்த முறையில் பாடலுக்கு வாயசைத்திருப்பார். ராதாவின் நடிப்பும். பாரதிராஜாவின் இயக்கமும் சிறப்பாக இருக்கும்.


இந்த பாடலின் வரிகள்

நம்தம்த நம்தனம்தம் நம்தனம்தம்
நம்தனம்தம் நம்தனம்தம் நம்தனம்தம்
நம்தம்த நம்தம் நம்தம்த நம்தம்
நம்தம்த நம்தம் நம்தம்த நம்தம்
என் நாதமே வா வா..

சங்கீத ஜாதிமுல்லை காணவில்லை
கண்கள் வந்தும் பாவையின்றி பார்வையில்லை
ராகங்களின்றி சங்கீதமில்லை
சாவொன்றுதானா நம் காதல் எல்லை
என் நாதமே வா வா...

சங்கீத..

திருமுகம் வந்து பழகுமோ அறிமுகம் செய்து விலகுமோ
விழிகளில் துளிநீர் வழியுமோ அது பிரிவதைத் தாங்க முடியுமோ
கனவினில் எந்தன் உயிரும் உறவாகி விழிகளில் இன்று அழுது பிரிவாகி
தனிமையில் எந்தன் இதயம் சருகாகி உதிருமோ
திரைகள் இட்டாலும் மறைந்து கொள்ளாது
அணைகள் இட்டாலும் வழியில் நில்லாது
பொன்னி நதி கன்னி நதி ஜீவா நதி
விழிகள் அழுதபடி கரங்கள் தொழுதபடி
சிறைகளும் பொடிபட வெளிவரும் ஒருகிளி
இசை எனும் மழை வரும் இனி எந்தன் மயில் வரும்
ஞாபக வேதனை தீருமோ
ஆடிய பாதங்கள் காதலின் வேதங்கள் ஆகிடுமோ ஆடிடுமோ பாடிடுமோ
ராஜ தீபமே எந்தன் வாசலில் வாராயோ
குயிலே.. குயிலே..
குயிலே.. குயிலே..
உந்தன் ராகம் நெஞ்சில் நின்று ஆடும்
ராஜ தீபமே..

நான் தேடி வந்த ஒரு கோடை நிலவு அவள் நீதானே நீதானே
மனக் கண்ணில் நின்று பல கவிதை தந்தமகள் நீதானே நீதானே நீதானே
விழி இல்லை எனும்போது வழி கொடுத்தாய்
விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்

விழி இல்லை..

நெஞ்சில் என்றும் உந்தன் பிம்பம்
சிந்தும் சந்தம் உந்தன் சொந்தம்
தத்திச்செல்லும் முத்துச் சிற்பம் கண்ணுக்குள்ளே கண்ணீர் வெப்பம்
இன்னும் என்ன நெஞ்சில் அச்சம் கண்ணில் மட்டும் ஜீவன் மிச்சம்
முல்லைப் பூவில் முள்ளும் உண்டோ கண்டுகொண்டும் இந்த வேஷமென்ன
ராக தீபமே..




இந்த பாடலை இதுவரை ரசித்து கேட்காதவர்கள் ஒருமுறை இந்த இடத்தில் கேட்டு பாருங்கள்

பொன்னி நதி கன்னி நதி ஜீவா நதி
விழிகள் அழுதபடி கரங்கள் தொழுதபடி
திரைகளும் பொடிபட வெளிவரும் ஒருகிளி
இசை எனும் மழை வரும் இனி எந்தன் மயில் வரும்
ஞாபக வேதனை தீருமோ
ஆடிய பாதங்கள் காதலின் வேதங்கள் ஆகிடுமோ ஆடிடுமோ பாடிடுமோ
ராஜ தீபமே எந்தன் வாசலில் வாராயோ
குயிலே.. குயிலே..

இப்போ வரும் அந்த violin இசை கண்டிப்பா உங்கள உருக வச்சிடும்.





படம் : கரும்பு வில்
பாடல் : மீன்கொடி தேரில்..
பாடியவர் : ஜேசுதாஸ், ஜென்சி
பாடலாசிரியர் : புலமைபித்தன்*

இந்த பாடலின் சிறப்பே ராஜாவோட tune தான். சில நல்ல பாடல்கள் எந்த படத்தில இருந்து வந்தது, யார் நடிச்சதுனு தெரியாமலே இருக்கும். அந்த லிஸ்ட்ல இருக்கும் பாடல் இது.

" மீன்கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்
மீன்கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்
ரதியோ விதியின் பிரிவில் மதனோ ரதியின் நினைவில்
உறவின் சுகமே இரவே தருமே
காதலர் தேவனின் பூஜையில் நாளினில்.. "




படம் : பகல் நிலவு
பாடல் : வாராயோ வான்மதி..
பாடியவர் : ரமேஷ், வாணி ஜெயராம்*
பாடலாசிரியர் : வாலி*

இந்த பாடலை பாடியிருப்பவர் ரமேஷ். பொதுவா இந்த மாதிரி பாடல நம்ம SPB சூப்பரா பாடுவாரு. இந்த பாட்டுல ரெண்டாவது சரணத்தில "நானும் பாடும் பாடலே காதில் கேட்கவில்லையோ இல்லையோ.." னு வாணி ஜெயராம்* பாடிருப்பாங்க. அவங்களோட குரல் ரொம்ப நல்ல இருக்கும். ராஜா violin, Flute, தபேலாவ அருமையா பயன்படுத்தியிருப்பார். அருமையான பாடல் கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும்.




சங்கீத ஜாதிமுல்லை பாடல் பார்வைக்கு


No comments: