.jpg)
கவிதை : மரம்
கவிதை குரல் : வைரமுத்து
இசை : இனியவன்
பாடியவர்கள் : SPB, S.ஜானகி
இந்த கவிதையில் எனக்கு பிடித்த வரிகள்
" பிறந்தோம் தொட்டில் மரத்தின் உபயம்
நடந்தோம் நடைவண்டி மரத்தின் உபயம்
எழுதினோம் பென்சில் பலகை மரத்தின் உபயம்
மணந்தோம் மாலை சந்தனம் மரத்தின் உபயம்
கலந்தோம் கட்டில் என்பது மரத்தின் உபயம்
இறந்தோம் சவப்பெட்டி பாடை மரத்தின் உபயம்
எறிந்தோம் சுடலை விறகு மரத்தின் உபயம்
மரந்தான் மரந்தான் எல்லாம் மரந்தான்
மறந்தான் மறந்தான் மனிதன் மறந்தான் "
கவிதை : இலையில் தங்கிய துளிகள்
கவிதை குரல் : வைரமுத்து
இசை : இனியவன்
பாடியவர்கள் : SPB
இந்த கவிதையில் எனக்கு பிடித்த வரிகள்
" நகரா மரங்கள் நகர்வதாகவும் நகரும் வாகனம்
நிலைகொண்டிருப்பதாகவும் நீளப்பொய் சொல்கிறது நெடுஞ்சாலை.."
" காலம் தன் சவுக்கை பூக்கள் மீது சொடுக்காமல் இருக்கலாம்"
"பூச்சரமிட்ட புகைப்படம் சொல்லியது உன் அம்மாவின் மரணம்
சரத்தின் சருகு சொல்லியது உன் பொருளாதாரம்"
"கார் கதவு சாத்த வந்த கணவன் சொன்னான்..
"நீங்களே அவளுக்கு தாலி கட்டியிருக்கலாம்"
உன் போல் பெண்மக்கள் ஊருலகில் எத்தனையோ
காதல் உற்ற செய்தியை காதலனுக்கு சொல்லாமல்
கணவற்கு சொன்னவர்கள்"
2 comments:
தேனி ராஜ்குமார்,
உங்கள் தம்ழ் தாகம் தீர்க்க, சில்லொன்ற புட்டி தண்ணீர், சரிதான்.
எனக்கு தெளிந்தோடும் கண்ணதாச ஆறும், சீறும் பாரதியின் கங்கையும் தான்.
நானும், விருதுநகர் சரித்திரமா(ன)வன்.
தேனியில், தேன்ராஜனை (52)அறிவீர்களா? பிரபலமானவர்தான்.
அவரது அண்ணன்,கல்லூரி ஹாக்கி டீமின் கோல் கீப்பர்.
வலை பதிவாளருக்காக கொஞ்சம் வலை போட்டு தேடிப்பாருங்களேன், பிளீஸ்.
raj... poda murai sonna karuthukku nalla munnetram... padalkalai un blogil serthu thandha visyam.. arumai.. idhupola yella padalakalukkum our link vacha super Raj...
Post a Comment