Friday, April 16, 2010

என்னை தாக்கிய புயல் - II



ரஹ்மான் இசைல வெளிவந்த சில படங்கள் தோல்வி அடைஞ்சிருக்கலாம். ஆனாலும் அந்த படத்தில வர்ற சில பாடல்கள் இன்னும் நம்மள முனுமுனுக்க வைக்கறதே ரஹ்மானோட வெற்றி தான். பவித்ரா படத்தில் வரும் "செவ்வானம் சின்னப்பெண்.." புதிய மன்னர்கள் படத்தில் வரும் " நீ கட்டும் சேல.." புதிய முகம் படத்தில் வரும் " கண்ணுக்கு மை அழகு.." வண்டிசோழை சின்ராசு படத்தில் வரும் " இது சுகம் சுகம்.." லவ் birds படத்தில வரும் " மலர்களே மலர்களே.. " ஏன் இப்போ வந்த சக்கரகட்டி "மருதாணி.." பாட்டு வர்ற, ரஹ்மான் இசையமைத்த பாடல்கள் ரசிக்கும் படியாத்தான் இருக்கும். ( பரசுராம், அல்லி அர்ஜுனா படத்தில கூட ஒன்னு ரெண்டு பாட்டு தேறும் ).

இந்த பதிவில் ரஹ்மான் இசையில் சாகுல் ஹமீது, S.P.பாலசுப்ரமணியம், உன்னி கிருஷ்ணன், M G ஸ்ரீகுமார் பாடிய பாடல்கள்.

சாகுல் ஹமீது
-------------



சாகுல் ஹமீது கார் accident ல இறந்த போது ரஹ்மான் ரொம்பவும் வருத்தப்பட்டார்னு கேள்விபட்டுருக்கேன். தொடர்ந்து 93-94 வருசத்துல்ல ரஹ்மான் இசையமைத்த படங்களுக்கு நல்ல பாடல்கள பாடியிருக்காரு சாகுல் ஹமீது. ஜென்டில்மேன் படத்தில "உசிலம்பட்டி பெண்குட்டி..", திருடா திருடா படத்தில " ராசாத்தி ஏன் உசுரு..", வண்டிசோலை சின்ராசு படத்தில " செந்தமிழ் நாட்டு தமிழச்சியே..", உழவன் படத்தில " மாரி மழை பெய்யாதோ..", மே மாதம் படத்தில " மெட்ராஸ சுத்தி காட்ட..", கிழக்கு சீமையிலே படத்தில " எதுக்கு பொண்டாட்டி..", கருத்தம்மா படத்தில " பச்சைக்கிளி பாடும்.. " பாடியிருந்தார்.

மாரி மழை பெய்யாதோ


S.P.பாலசுப்ரமணியம்
-------------------



சமிபத்துல நடந்த ஒரு பாராட்டு விழாவுல " ரஹ்மான எனக்கு 30 வருசமா தெரியும். அப்போ எப்படி இருந்தாரோ அப்படி தான் இப்பவும் இருக்காருன்னு" SPB சொல்லிருப்பாரு. ரஹ்மானுக்கு SPB நிறைய நல்ல பாட்டு பாடியிருக்காரு. எனக்கு பிடித்த சில பாடல்கள்.. " காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே..", " மின்னலே நீ வந்ததேனடி என் கண்ணிலே..", " தொட தொட மலர்ந்ததென்ன பூவே ", " என் காதலே என் காதலே என்னை என்ன செய்ய..", " என்னை காணவில்லையே நேற்றோடு..", " காதலென்னும் தேர்வெழுதி..", " வெள்ளி மலரே வெள்ளி மலரே.. ".

என் காதலே என் காதலே


உன்னி கிருஷ்ணன்
-----------------



முதல் பாடலான "என்னவளே அடி என்னவளே.." பாட்டுக்கு தேசிய விருது வாங்கியவர் உன்னி கிருஷ்ணன். இவர் வாய் வச்ச " சோனியா சோனியா.. " பீட் சாங் கூட Melody யா தான் கேட்குது. அவ்வளவு இனிமையான குரல் இவருடையது. " காற்றே என் வாசல் வந்தாய்..", " தென்றலே தென்றலே..", " தென்மேற்கு பருவ காற்று..", " ரோஜா ரோஜா .. ", " மார்கழி திங்கள்..", " பூவுக்குள் ஒளிந்திருக்கும்.." , " காலையில் தினமும் கண்விழித்தால்..". எல்லாம் Sweet Melodies.

என்னவளே அடி என்னவளே


M G ஸ்ரீகுமார்
-----------



பிரபல மலையாள பாடகரான M G ஸ்ரீகுமார், ரஹ்மானோட இசைல என் சுவாச காற்றே படத்தில " சின்ன சின்ன மழை துளியை.." பாடல பாடியிருப்பாரு. தாஜ் மஹால் படத்தில வர்ற " கரிசல் தரிசில் " பாட்ட சித்ராவோடு சேர்ந்து செமயா பாடியிருப்பாரு. தாஜ் மஹால் படம் ரிலீஸ் ஆனா நேரம் இந்த பாட்டுல வர்ற " மேகாத்து மூலயில மேகமில்ல மின்னலில்ல பூமி நெனஞ்சிருக்கு" பீட்டு தான் Advertisment ல வரும்.

கரிசல் தரிசில்



"என்னை காணவில்லையே நேற்றோடு.." வீடியோ பாடல்




No comments: