Thursday, October 7, 2010

எந்திரன் - திரை விமர்சனம்

மனிதனைப் போல் எந்திரமும் சிந்திக்க ஆரம்பித்தால்? இந்த ஒன் லைன்ன கதையா வச்சு ஷங்கர் ரஜினி கலாநிதிமாறன் உருவாக்கி இருக்கும் பிரம்மாண்டமான படைப்பு தான் " எந்திரன் ". போன பதிவிலே கதைய எழுதியிருந்தேன். அதுல, "CEO வால் அழிக்கப்பட்டு, வசீயால் மீண்டும் உயிர் பெற்று.. கிளைமாக்ஸ். " ன்னு எழுதியிருப்பேன். கொஞ்சம் மாத்தி படிச்சிக்கொங்க " வசீயால் அழிக்கப்பட்டு, போரா வால் மீண்டும் உயிர் பெற்று.. கிளைமாக்ஸ். "



சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் திரையில் வந்தாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். இதுல படம் ஆரம்பிச்ச பத்தாவது நிமிடத்திலே டபுள் act . கிளைமாக்ஸ்ல கணக்கே இல்ல. சில சீன் CG யா இருந்தாலும் ரஜினியோட உழைப்பு கொஞ்சநஞ்சமில்ல. ரஜினியோட costumes ரொம்ப நல்லா இருந்திச்சு. வசீ ரஜினி ரொம்ப இயல்பா நடிச்சிருப்பாரு. எனக்கு சிட்டி ரஜினி நடிப்பு ரொம்ப பிடிச்சிருந்துச்சு.

பிரஸ் மீட் ல ஒருத்தர் "கடவுள் இருக்காரா?" ன்னு கேட்பாரு. அதுக்கு சிட்டி பதில் சொல்லுறது, செம சீன் அது. ஆலயம்மன் கோயில்ல வர்ற சீன். இண்டர்வல் க்கு கொஞ்சம் முன்னால சிட்டி ரஜினிக்கு ஐஸ் முத்தம் கொடுப்பாங்க. ரஜினி சரியா expression கொடுத்திருப்பாரு.



ஐஸ் பர்த்டே பார்ட்டிக்கு போக ரெடி ஆகுற சீன். வசீ ஐஸ் சிட்டி அந்த Lake ஒட்டி வர்ற conversation. ஆர்மி ஆபிசர்கள் முன்னால சிட்டி காதல் கவிதை ( நா.முத்துக்குமார் வரிகள்) சொல்லுறது. dismantle பண்ணும் போது சிட்டி பேசும் வசனம். அந்த வில்லன் கேரக்டர். எல்லாமே செம மாஸ்.

பாடல் காட்சிகள்ல ஐஸ் ரொம்ப அழகா இருக்காங்க. வழக்கமான heroin கேரக்டர்ரா இல்லாம ஐஸ்க்கு நிறைய நல்ல சீன் படத்தில இருக்கு. நல்லா நடிச்சிருக்காங்க.



வில்லனாக வடஇந்திய நடிகர். AIRD approval ஆபிசர்ராக வரும் இவர் சரியாக நடித்துள்ளார். "இவரு எனக்கு வரம் கொடுத்தவரு. இவர் தலைல நான் தான் கை வைப்பேன்னு" வில்லன் ரோபா ரஜினியிடம் புஸ்'சாகிறார்.



படத்தில ஷங்கரோடு இணைந்து பாராட்ட பட வேண்டிய முக்கியமான நபர்கள் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு, இசையமைப்பாளர் A.R. ரஹ்மான், கலை சாபு சிரில், Stunt Peter Hein, மற்றும் பலர்.



நிரவ் ஷா பண்ண வேண்டிய படம் ரத்னவேலு பண்ணியிருக்கார். படம் கொஞ்சம் வேகமா வந்திருக்குனா அதுக்கு இவரோட மெனக்கெடல் தான் காரணம். ஷங்கரோட கனவுக்கு உயிர் கொடுத்த பிரம்மா இவர் தான். சாபு சிரில் உழைப்புக்கு நிச்சயம் விருதுகள் வந்து குவியும். அந்த ட்ரெயின் fight ரொம்ப நல்லா எடுத்திருப்பாரு பீட்டர் ஹெயன்.



A.R.ரஹ்மான் பின்னணி இசையில் இசை ரகுமாங்கம் பண்ணியிருக்கார். இரும்பிலே ஒரு இருதயம் பாடல் Instrument, ஆங்காங்கே வரும். இண்டர்வல் க்கு கொஞ்சம் முன்னால, Renguski யா தேடி வரும் போது பயன் படுத்தியிருப்பார் நல்லா இருக்கும்.

ட்ரெயின் fight ல வரும் BGM. வில்லன் ரோபா ரஜினி intro சீன் வரும் BGM. பாடல்கள பத்தி போன பதிவிலே சொல்லி இருந்தேன். காதல் அணுக்கள், கிளிமஞ்சாரோ பாட்டு செமயா இருந்திச்சு.



சுஜாதா அவர்களின் வசனம் எது என்று கண்டுபிடிக்க முடியல. சிட்டி கார் டிரைவ் பண்ணும் போது ஒரு ஆட்டோ டிரைவர் " டேய் தண்ணிய போட்ட கார ஓட்டுற" சிட்டி " இல்லை பெட்ரோல் போட்டு ஓட்டுறேன்." சந்தானம் கருணாஸ் சிட்டி கிட்ட எங்கள மாதிரி இது பண்ண தெரியுமா அது பண்ண தெரியுமான்னு கலாய்க்கும் போது மனுசங்களுக்கும் எனக்கும் இந்த வித்யாசம் தான் இருக்கா ன்னு சிட்டி கேட்கறது.



ஐஸ் கிட்ட " மனித இனம் தன்னை காப்பாத்திக்க பொய் சொல்லும்னு தெரிஞ்சிகிட்டேன் " சிட்டி சொல்லுறது. வசீ " உன்ன உருவாக்கினவன் நான் இதுக்கு பேர்தான் துரோகம்" சிட்டி " You can do this வசீ இதுக்கு பேர்தான் தியாகம்" ன்னு பல வசனங்கள் நச்.



அரிமா அரிமா பாடல் பிரம்மாண்டமா எடுத்திருப்பார்னு போன பதிவிலே எழுதியிருந்தேன். வசீய கண்டுபிடிக்க வில்லன் ரோபா ரஜினி அதகளம் பண்ற சீன் கிழே இணைத்துள்ளேன். மிரட்டி இருக்காரு. பாருங்க.



இந்தப்படம் தமிழுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே ஒரு முன்மாதிரியான படம். இந்தமாதிரி ஒரு படம் ஷங்கர் கண்ட கனவு மட்டுமல்ல பல ரசிகர்கள் கண்ட கனவு. அதை சன்னை தவிர யாராலும் நினைவாக்க முடியாது. இந்த படம் நிறைய விருதுகள் சாதனைகள் பெரும். வாழ்த்துக்கள் ஷங்கர்.

Friday, September 24, 2010

எந்திரன்

1976 ஆம் ஆண்டு வெளியான ஐசக் அசிமோவின் "பைசென்ட்டேன்னியல் மேன்" நாவல் கண்டிப்பா ஷங்கரின் "எந்திரன்" படத்துக்கு ஒரு inspiration னா இருக்கும்.

மனிதர்களுக்கும் சமுதாயத்துக்கும் உதவியாக இருக்க ஒரு எந்திர மனிதனை (சிட்டி) வசீ உருவாக்கிறாரு. மனித ஆற்றலை விட ஆயிரம் மடங்கு வேகம் கொண்ட சிட்டிக்கு, மனிதனுக்கு இருக்கும் உணர்வுகளை (அன்பு, கோபம், விசுவாசம்,வஞ்சம்.,) அளித்தால் என்ன விளைவுகள் வரும் என்று அறியாமல் upgrade பண்ணி விடுகிறார்.

முதலில் சனா மீது காதல் வருகிறது. தன் காதலை எதிர்க்கும் வசீ மீது கோபம், சனாவை அடைய CEO வழி காட்டுதலின் பேரில் தவறுகள் செய்து, CEO வால் அழிக்கப்பட்டு, வசீயால் மீண்டும் உயிர் பெற்று.. கிளைமாக்ஸ். நீங்க நினைக்கிறது கரெக்ட் trailer பார்த்து தான் கதை சொல்லுறேன்..

ரஜினி படத்துக்கு தேவையான எல்லா விசயமும் கண்டிப்பா எந்திரன்ல இருக்கும். ஒரே பயம், ஆளவந்தான் படம் இப்படி தான் ஓவர் பில்ட் அப் கொடுத்தாங்க first half full'a ஏதோ கார்ட்டூன் படம் பார்த்த மாதிரி இருந்திச்சு. CG ங்ரா பேர்ல ஷங்கர் ஏதும் கார்ட்டூன் பண்ணுனார்ன ஆளவந்தான் ரிசல்ட் தான்.

எந்திரன் பாடல்கள பத்தி சொல்லியே ஆகணும். ரஹ்மானின் சிறந்த இசை விருந்து.

"புதிய மனிதா பூமிக்கு வா.." இந்த பாடல் மற்ற ரஜினி intro பாடல் மாதிரி இல்லாம சும்மா backround ல வரும்னு நினைக்கிறேன்.

முதல் முறை கேட்ட போதே "காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை.." பாடல் அருமையா இருந்திச்சு.

" பூம் பூம் ரோபா டா.." இந்த பாடல் மனிதர்களுக்கு உதவியா சிட்டி எப்படி எல்லாம் இருக்குது காட்டுவாங்க.

"Chitti Dance Showcase.." இந்த பாடல் போட்டி நடனமா வரும் CG புண்ணியத்துல தலைவர் பாரத நாட்டியம் அடிருக்காராம். சிட்டிக்கு சனா மீது காதல் வரும் இடம் இந்த பாடல தான் இருக்கும்.

"இரும்பிலே ஒரு இருதயம்.. " பாடல் வரிகள் ஒன்னும் புரியாம இருந்திச்சு. இப்ப சில வரிகள் புரியுது.

"அரிமா அரிமா ஆயிரம் அரிமா.." கண்டிப்பா இந்த பாடல பிரமிப்பா எடுத்திருப்பார்னு நினைக்கிறேன். பல ரஜினி ரோபக்கள நீங்க இந்த பாட்டுல பாக்கலாம்னு நினைக்கிறேன்.

"கிளிமஞ்சாரோ மலை கனி மஞ்சரோ.." எனக்கு பிடித்த நல்ல பாடல். சின்மயி & ஜாவேத் கொஞ்சம் வித்யாசமா பாடியிருப்பாங்க. என்னோட caller tune இந்த பாடல் தான். இதே வரிசையில் பாடல்கள் படத்தில் வரும் என்று நினைக்கிறேன்.

சென்னைல எப்படியும் 40 theatre ல படம் ரிலீஸ் ஆகும். படத்த முதல் நாளே பார்த்திட்டு நம்ம கதை ஓகேவ ஷங்கர் இன்னும் பெட்டெர எடுத்திருக்காரானு பாப்போம். எந்திரன் பாடல்களை கேட்க கீழே இணைத்துள்ளேன் எனக்கு பிடித்த வரிசையில்..

கிளிமஞ்சாரோ..

இசை : ரஹ்மான்
பாடலாசிரியர் : பா.விஜய்
பாடியவர்கள் : ஜாவேத் அலி, சின்மயி



அரிமா அரிமா..

இசை : ரஹ்மான்
பாடலாசிரியர் : வைரமுத்து
பாடியவர்கள் : ஹரிஹரன்,சாதனா சர்கம்



Chitti Dance Showcase..

இசை : ரஹ்மான்
பாடியவர்கள் : பிரதீப் விஜய், பிரவின் மணி, யோகி B



இரும்பிலே ஒரு..

இசை : ரஹ்மான்
பாடலாசிரியர் : கார்கி
பாடியவர்கள் : A. R. ரஹ்மான் , Kash'n'Krissy



காதல் அணுக்கள்..

இசை : ரஹ்மான்
பாடலாசிரியர் : வைரமுத்து
பாடியவர்கள் : விஜய் பிரகாஷ், ஸ்ரேயா கோஷல்



புதிய மனிதா..

இசை : ரஹ்மான்
பாடலாசிரியர் : வைரமுத்து
பாடியவர்கள் : S .P.பாலசுப்ரமணியம், ரஹ்மான், கதிஜா



பூம் பூம்..

இசை : ரஹ்மான்
பாடலாசிரியர் : கார்கி
பாடியவர்கள் : யோகி B, கீர்த்தி சகத்தியா, ஸ்வேதா மோகன், தன்வி ஷா

Friday, July 2, 2010

யேசுதாஸ் ஹிட்ஸ்



சோகப்பாடல், மெலடி, துள்ளல், Folk சாங்னு எல்லாத்திலையும் சிறப்ப பாடுறவரு தான் நம்ம யேசுதாஸ். ஆடல் கலையே தேவன் தந்தது பாட்டும் பாடுவாரு.. உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை பாட்டும் பாடுவாரு.. தண்ணி தொட்டி தேடி வந்த பாட்டும் பாடுவாரு.. கனவு காணும் வாழ்க்கை யாவும் களைந்து போகும் கோலங்கள் பாட்டும் பாடுவாரு.. இந்த பதிவுல யேசுதாஸ் பாடின சில Variety Songs பகிர்ந்திருக்கேன் கேட்டு பாருங்க.

Folk Song

செப்புக்குடம் தூக்கி போற..

யேசுதாஸ் பாடின ரொம்ப வித்யாசமான பாடல் இது. இந்த பாடலில் ஒரு நையாண்டித்தனம் இருக்கும். என்னுடைய பள்ளி விடுதியில் சனி ஞாயிறு அன்று பாடல்கள் போடும் போது கண்டிப்பா இந்த பாடலையும் போடுவாங்க. " ஏய் ஒன்ன தான் எங்கே பாக்கிற " இந்த வரி பாடலில் இடை இடையே வரும். வாணி ஜெயராம் யேசுதாஸ் combination ல ஹிட் ஆனா பாடல்கள, நல்ல Folk Song இது.

படம்: ஒத்தையடி பாதையிலே
இசை : சங்கர் கணேஷ்
பாடியவர்கள் : யேசுதாஸ், வாணி ஜெயராம்

ஏய் ஒன்ன தான் எங்கே பாக்கிற
ஒன்ன தான் அட ஒன்னத் தான்

செப்புக்குடம் தூக்கி போற செல்லமா
நான் விக்கி போறேன் தாகத்திலே நில்லம்மா..
கக்கத்தில வச்ச குடம் செல்லையா
இது கண்டவங்க தாகத்திக்கு இல்லையா..

(செப்புக்குடம் தூக்கி)

ஏய் ஒன்ன தான் எங்கே பாக்கிற
ஒன்ன தான் அட ஒன்னத் தான்




Duet Song

பூ மேலே வீசும் பூங்காற்றே..

அங்காடி தெரு படம் பாத்தவங்க இந்த படத்தையும் பாக்கலாம். அங்காடி தெரு படத்தில climax 'னாச்சும் positive முடிச்சிருப்பாங்க. ஆனா இந்த படத்தில அதுவும் missing. ராஜாவோட இசைல வரும் பூமேலே வீசும் பூங்காற்றே பாடல் பாட்டுக்காகத்தான் KTV ல படம் பார்த்தேன். படம் அவ்வளவு சோகம்.

படம் : எச்சில் இரவுகள்
இசை : இசைஞானி இளையராஜா
பாடியவர்கள் : யேசுதாஸ், வாணி ஜெயராம்

பூ மேலே வீசும் பூங்காற்றே
என் மேல் வீச மாட்டாய
பூ மேலே வீசும் பூங்காற்றே
என் மேல் வீச மாட்டாய
காதில் சொன்னாயே ஹோய் ஹோய்
காதல் சங்கீதம் ஹோய் ஹோய்
காதில் சொன்னாயே ஹோய் ஹோய்
காதல் சங்கீதம் ஹோய் ஹோய்
கண்வாசலில் உன் வாசமோ..
கண்வாசலில் உன் வாசமோ..

( பூ மேலே )




Sad Song

பூங்காத்தே பூங்காத்தே போனவள..

யேசுதாஸ் பாடிய சோகப்பாடல்களில் இது கொஞ்சம் Rare Song. இந்த பாடலில் வரும் வரிகள் நல்லா இருக்கும். பாடல் எழுதியது கங்கை அமரனா வைரமுத்துவானு சரியா தெரியல. பாடல் கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும்.

படம் : நாளெல்லாம் பௌர்ணமி
இசை : கங்கை அமரன்
பாடலாசிரியர் : வைரமுத்து*

பூங்காத்தே பூங்காத்தே போனவள பூங்குயில பாத்தியா
தாங்காம தவிச்சேனே சின்னவள என்னிடத்தில் சேர்பியா..




Melody Song

காக்கை சிறகினிலே நந்தலாலா..

ஏழாவது மனிதன் படத்தில வர்ற பாரதியார் பாடல்கள்ல இந்த பாடல் ரொம்ப நல்லா இருக்கும். இசை கோர்ப்பு தான் கொஞ்சம் இரைச்சல இருக்கும்.

படம் : ஏழாவது மனிதன்
இசை : L. வைத்தியநாதன்
பாடலாசிரியர் : மகாகவி பாரதியார்

காக்கை சிறகினிலே நந்தலாலா - நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா

பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா - நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா

கேட்கும் ஒளியில் எல்லாம் நந்தலாலா - நின்றன்
கீதம் இசைக்குதடா நந்தலாலா

தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா - நின்னை
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா

Friday, June 11, 2010

இனிமையான பாடல்கள்



இந்த பதிவுல P.சுசிலா , S. ஜானகி பாடின நான் ரசிச்சு கேட்கிற பாடல்கள பகிர்ந்திருக்கேன்.

நாளை இந்த வேளை..

சுசிலா இந்த பாடலுக்கு தேசிய விருது வாங்கிருக்காங்க. அவங்க கலந்துக்கிற மேடை நிகழ்ச்சிகள்ல இந்த பாட்ட கண்டிப்பா கேட்கலாம். இந்த பாட்ட கண்ணதாசன் தான் எழுதினார்னு நெனச்சேன், எழுதினது வாலி. " நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா.. இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா.. தென்றலே என் தனிமை கண்டு நின்று போய் விடு ". வாலியோட அற்புதமான பாடல் வரிகளுக்கு விஸ்வநாதன் இனிமையான மெட்டு அமைத்திருப்பார்.

படம் : உயர்ந்த மனிதன்
இசை : மெல்லிசை மன்னர் M.S. விஸ்வநாதன்
பாடியவர் : P.சுசிலா
பாடலாசிரியர் : வாலி

பால் போலவே வான் மீதிலே
யார் காணவே நீ காய்கிறாய்

நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா
இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா
தென்றலே என் தனிமை கண்டு நின்று போய் விடு
தென்றலே என் தனிமை கண்டு நின்று போய் விடு

வண்ண விழியன் வாசலில் என் தேவன் தோன்றினான்
எண்ணம் என்னும் மேடையில் பொன் மாலை சூடினான்
வண்ண விழியன் வாசலில் என் தேவன் தோன்றினான்
எண்ணம் என்னும் மேடையில் பொன் மாலை சூடினான்
கன்னி அழகை பாடவோ அவன் கவிஞன் ஆகினான்
கன்னி அழகை பாடவோ அவன் கவிஞன் ஆகினான்
பெண்மையே உன் மேன்மை கண்டு கலைஞன் ஆகினான் கலைஞன் ஆகினான் ( நாளை இந்த..)

சொல்ல நினைத்த ஆசைகள் சொல்லாமல் போவதேன்
சொல்ல வந்த நேரத்தில் பொல்லாத நாணமேன்
மன்னன் நடந்த பாதையில் என் கால்கள் செல்வதேன்
மன்னன் நடந்த பாதையில் என் கால்கள் செல்வதேன்
மங்கையே உன் கண்கள் இன்று மயக்கம் கொண்டதேன் மயக்கம் கொண்டதேன்.. ( நாளை இந்த..)

இந்த பாடலை கேட்க..





புத்தம் புதுக் காலை..

இந்த பாட்ட visual ல எடுக்காம விட்ட பாரதிராஜாவுக்கு கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். ஏன்டா உனக்கு "செந்தூரபூவே செந்தூரபூவே என் மன்னன் எங்கே.." பாட்டெல்லாம் தெரியாதான்னு கேட்காதிங்க. "நாளை இந்த வேளை பார்த்து.. " பாட்டுக்கும் "செந்தூரபூவே செந்தூரபூவே.." பாட்டுக்கும் ஒரே feel தான். அதான் இந்த பாட்ட பகிர்ந்திருக்கேன். அருமையான இந்த பாடல FM ல தான் கேட்க முடியும்.

படம் : அலைகள் ஓய்வதில்லை
இசை : இசைஞானி இளையராஜா
பாடியவர் : S. ஜானகி
பாடலாசிரியர் : வைரமுத்து*

புத்தம் புதுக் காலை பொன்னிற வேளை
என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும் எந்நாளும் ஆனந்தம்

(புத்தம் புதுக் காலை.. )

பூவில் தோன்றும் வாசம் அதுதான் ராகமோ
இளம் பூவை நெஞ்சில் தோன்றும் அதுதான் தாளமோ
மனதின் ஆசைகள் மலரின் கோலங்கள்
குயிலோசையின் பரிபாஷைகள் அதிகாலையின் வரவேற்புகள்

(புத்தம் புதுக் காலை.. )

வானில் தோன்றும் கோலம் அது யார் போட்டதோ
பனி வாடை வீசும் காற்றின் சுகம் யார் தந்ததோ
வயதில் தோன்றிடும் நினைவில் ஆனந்தம்
வளர்ந்தாடுது இசைபாடுது வழிந்தோடுது சுவைகூடுது

(புத்தம் புதுக் காலை.. )

இந்த பாடலை கேட்க..

Sunday, May 9, 2010

யேசுதாஸ் ஹிட்ஸ்



இந்த பதிவுல எனக்கு பிடிச்ச சில Rare யேசுதாஸ் பாடல்கள பகிர்ந்திருக்கேன். கேட்டு பாருங்க உங்களுக்கும் பிடிக்கும்.

1.ரவிவர்மன் எழுதாத கலையோ..

பொதுவா நான் பாட்டு கேட்கரதோடு சரி பாடமாட்டேன். ஆனா இந்த பாட்டுல வர்ற "ல ல லால ல ல லால" hum பண்ணாம இருக்க முடியாது.. எனக்கு பிடித்த sweet Melodies song இது.

படம் : வசந்தி
பாடியவர்கள் : யேசுதாஸ், சித்ரா
பாடலாசிரியர் : வைரமுத்து
இசை : சந்திர போஸ்

ரவிவர்மன் எழுதாத கலையோ
ரதிதேவி வடிவான சிலையோ..
கவிராஜன் எழுதாத கவியோ..
கரை பொட்டு நடக்காத நதியோ..

ரவிவர்மன் எழுதாத கலையோ..

விழியோர சிருபார்வை போதும்..
நான் விலையாடும் மைதானம் ஆகும்..
இதழோர சிரிப்பொன்று போதும்..
நான் இளைப்பாறும் மலர் பந்தல் ஆகும்..

கையேந்தினால் வந்து வீழ்ந்தேன் பெண்ணே..
கருங்கூந்தலில்.. நான் தொலைந்தேன் கண்ணே...

ரவிவர்மன் எழுதாத கலையோ..

பூமாலையே.. உன்னை மணப்பேன்..
புதுசேலை கசங்காமல் அணைப்பேன்
மகாராணி போல் உன்னை மதிப்பேன்
உன் மடி மீது என் ஜீவன் முடிப்பேன்...

என் மேனியில் இரு துளிகள் விழும்..
அது போதுமே.. ஜீவன் அமைதி கொல்லும்..

ரவிவர்மன் எழுதாத கலையோ..




2.எந்தன் பாடல்களில் நீ நீலம்பரி...

80 'ல நம்ம T . ராஜேந்தர் சில நல்ல பாடல்கள தந்திருக்கார். அதுல என்னோட Favourite Song. இந்த பாட்டுல வர்ற வரிகள் நல்லா இருக்கும்.

படம் : உறவை காத்த கிளி
பாடியவர்கள் : யேசுதாஸ், சசிரேகா
பாடலாசிரியர் & இசை : T. ராஜேந்தர்

எந்தன் பாடல்களில் நீ நீலம்பரி...
உன்னை பாடாமலே மனம் தூங்காதடி...

தீம்தன தீம்தன தீம்தன
தீம்தன தீம்தன தீம்தன

எந்தன் பாடல்களில் நீ நீலம்பரி
உன்னை பாடாமலே மனம் தூங்காதடி
வலம்புரி சங்கை கூட உன் கழுத்து
மிஞ்சுதடி வஞ்சி மலரே.... ஓ...
நிலவதன் தங்கை என உன் ஜொலிப்பு
சொல்லுதடி வைர சிலையே..

எந்தன் பாடல்களில் நீ நீலம்பரி
உன்னை பாடாமலே மனம் தூங்காதடி
வசந்தம் என்னும் ஒரு பாவை
நீ அசைந்து வந்த ஒரு சோலை
வசந்தம் என்னும் ஒரு பாவை
நீ அசைந்து வந்த ஒரு சோலை

பொய்கை தாமரையில்
புகுந்த வண்டு ஒன்று அம்மம்மா....
போதை ஏற்றி கொல்ல
தாளம் போடுதடி அம்மம்மா....
பொய்கை தாமரையில்
புகுந்த வண்டு ஒன்று அம்மம்மா....
போதை ஏற்றி கொல்ல
தாளம் போடுதடி அம்மம்மா....

பொய்கை வண்டாய் உன் கை மார
மங்கை நாண சேவை செய்தாய்
வைகை போல் நாணத்தில் வலைகின்றேனே
வை கை நீ என்றுன்னை சொல்கின்றேனே

எந்தன் பாடல்களில் நீ நீலம்பரி..

பச்சை அரிசி என்னும்
பற்கள் கொண்ட உந்தன் புன்சிரிப்பு
நெஞ்ச பானையிலே நித்தம்
வேகிரது உன் நினைப்பு
பச்சை அரிசி என்னும்
பற்கள் கொண்ட உந்தன் புன்சிரிப்பு
நெஞ்ச பானையிலே நித்தம்
வேகிரது உன் நினைப்பு

வார்த்தை தென்றல் நீ வீசும்போது
ஆடும் பூவாய் ஆனேன் மாது
இதழோரம் சில்லென்று நனைகின்றது
சிந்தும் தேன் கூட சிந்தொன்று புனைகின்றது

எந்தன் பாடல்களில் நீ நீலம்பரி..



3.துள்ளி துள்ளி போகும் பெண்ணே..

ஊமை விழிகள் படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர்களின் மற்றொரு படம். யேசுதாசின் சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று.

படம் : வெளிச்சம்
பாடியவர் : யேசுதாஸ்
இசை : மனோஜ் - க்யான்

துள்ளி துள்ளி போகும் பெண்ணே
சொல்லிக்கொண்டு போனால் என்ன..
கன்னி உந்தன் பேர் என்ன..
வெள்ளி கொலுசு போகும் திசையில்
பாவி நெஞ்சம் போவதென்ன..

துள்ளி துள்ளி போகும் பெண்ணே..

பூமி என்னும் பெண்ணும்
பொட்டு வைத்துக்கொண்டு
பச்சை ஆடை கட்டி பார்த்தாள்..
ஓடை பெண் நாணம் கொண்டு
ஏன் வளைந்து போகிறாள்..
பூமி என்னும்..

பூமி பெண்ணுக்கும் கன்னி பெண்ணைப் போல்
நெஞ்சில் ஈரம் உண்டு..

துள்ளி துள்ளி போகும் பெண்ணே..

அந்தி வெளிச்சம் முந்தி விரித்து
பந்தி இங்கு வைக்கும் நேரம்..
பூச்சிந்தும் பூமியெல்லாம் நான் வணங்கும் காதலி..
அந்தி வெளிச்சம்..

மண்டியிட்டு நான் முத்தம் தரவா..
தென்றல் பெண்ணே வா..வா.. வா..

துள்ளி துள்ளி போகும் பெண்ணே..

Sunday, April 25, 2010

எனக்கு பிடித்த பாடல் - I



சில பாடல்கள கேட்காமல் இருந்திருப்போம், இந்த பாட்ட கேட்டதில்லையானு நண்பர்கள் ரசித்து விமர்சிக்கும் போது பாடல்களை உடனே கேட்டு பார்ப்போம். பிடித்திருந்த நாலு பேருக்கு நாமும் அந்த பாட்ட கேட்க சொல்லுவோம். இசை ரசிகர்களிடம் இது பொதுவாக இருக்கும்.

ராகதேவன் இளையராஜா இசையில் எனக்கு பிடித்த பாடல்களை பகிரவே இந்த தொடர்பதிவு. பண்ணபுரத்துக்காரர் பாடல டாப் 10, டாப் 1 ன்னு வரிசை படுத்துறது ரொம்ப சிரமமான காரியம். அதனால நான் வரிசை படுத்தல தொடர்பதிவ எழுதலாம்னு இருக்கேன்..


படம் : காதல் ஓவியம்
பாடல் : சங்கீத ஜாதிமுல்லை..
பாடியவர் : SPB
பாடலாசிரியர் : வைரமுத்து

ஒரு பாடலின் வெற்றிக்கு இசையமைப்பாளரின் மெனக்கெடல் ரொம்ப முக்கியமானது. அதே சிரத்தை பாடலாசிரியரிடமும், பாடியவரிடமும், படமாக்கியவரிடமும், நடித்தவர்களிடமும் காண பெற்றால்.. இந்த பாடலில் அமைந்தது அதுவே, வைரமுத்து இதுவரை எழுதிய பாடல்களில் அதிக நேரம் எடுத்துக்கொண்டது இந்த பாடலுக்கே ( எட்டு மணிநேரம் ). இந்த பாடலில் வரும் வரிகளுக்கு ஏற்றார்போல் உணர்ச்சி ததும்ப பாடியிருப்பார் பாலசுப்ரமணியம். இந்த பாடலில் நடித்திருக்கும் நடிகர் சிறந்த முறையில் பாடலுக்கு வாயசைத்திருப்பார். ராதாவின் நடிப்பும். பாரதிராஜாவின் இயக்கமும் சிறப்பாக இருக்கும்.


இந்த பாடலின் வரிகள்

நம்தம்த நம்தனம்தம் நம்தனம்தம்
நம்தனம்தம் நம்தனம்தம் நம்தனம்தம்
நம்தம்த நம்தம் நம்தம்த நம்தம்
நம்தம்த நம்தம் நம்தம்த நம்தம்
என் நாதமே வா வா..

சங்கீத ஜாதிமுல்லை காணவில்லை
கண்கள் வந்தும் பாவையின்றி பார்வையில்லை
ராகங்களின்றி சங்கீதமில்லை
சாவொன்றுதானா நம் காதல் எல்லை
என் நாதமே வா வா...

சங்கீத..

திருமுகம் வந்து பழகுமோ அறிமுகம் செய்து விலகுமோ
விழிகளில் துளிநீர் வழியுமோ அது பிரிவதைத் தாங்க முடியுமோ
கனவினில் எந்தன் உயிரும் உறவாகி விழிகளில் இன்று அழுது பிரிவாகி
தனிமையில் எந்தன் இதயம் சருகாகி உதிருமோ
திரைகள் இட்டாலும் மறைந்து கொள்ளாது
அணைகள் இட்டாலும் வழியில் நில்லாது
பொன்னி நதி கன்னி நதி ஜீவா நதி
விழிகள் அழுதபடி கரங்கள் தொழுதபடி
சிறைகளும் பொடிபட வெளிவரும் ஒருகிளி
இசை எனும் மழை வரும் இனி எந்தன் மயில் வரும்
ஞாபக வேதனை தீருமோ
ஆடிய பாதங்கள் காதலின் வேதங்கள் ஆகிடுமோ ஆடிடுமோ பாடிடுமோ
ராஜ தீபமே எந்தன் வாசலில் வாராயோ
குயிலே.. குயிலே..
குயிலே.. குயிலே..
உந்தன் ராகம் நெஞ்சில் நின்று ஆடும்
ராஜ தீபமே..

நான் தேடி வந்த ஒரு கோடை நிலவு அவள் நீதானே நீதானே
மனக் கண்ணில் நின்று பல கவிதை தந்தமகள் நீதானே நீதானே நீதானே
விழி இல்லை எனும்போது வழி கொடுத்தாய்
விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்

விழி இல்லை..

நெஞ்சில் என்றும் உந்தன் பிம்பம்
சிந்தும் சந்தம் உந்தன் சொந்தம்
தத்திச்செல்லும் முத்துச் சிற்பம் கண்ணுக்குள்ளே கண்ணீர் வெப்பம்
இன்னும் என்ன நெஞ்சில் அச்சம் கண்ணில் மட்டும் ஜீவன் மிச்சம்
முல்லைப் பூவில் முள்ளும் உண்டோ கண்டுகொண்டும் இந்த வேஷமென்ன
ராக தீபமே..




இந்த பாடலை இதுவரை ரசித்து கேட்காதவர்கள் ஒருமுறை இந்த இடத்தில் கேட்டு பாருங்கள்

பொன்னி நதி கன்னி நதி ஜீவா நதி
விழிகள் அழுதபடி கரங்கள் தொழுதபடி
திரைகளும் பொடிபட வெளிவரும் ஒருகிளி
இசை எனும் மழை வரும் இனி எந்தன் மயில் வரும்
ஞாபக வேதனை தீருமோ
ஆடிய பாதங்கள் காதலின் வேதங்கள் ஆகிடுமோ ஆடிடுமோ பாடிடுமோ
ராஜ தீபமே எந்தன் வாசலில் வாராயோ
குயிலே.. குயிலே..

இப்போ வரும் அந்த violin இசை கண்டிப்பா உங்கள உருக வச்சிடும்.





படம் : கரும்பு வில்
பாடல் : மீன்கொடி தேரில்..
பாடியவர் : ஜேசுதாஸ், ஜென்சி
பாடலாசிரியர் : புலமைபித்தன்*

இந்த பாடலின் சிறப்பே ராஜாவோட tune தான். சில நல்ல பாடல்கள் எந்த படத்தில இருந்து வந்தது, யார் நடிச்சதுனு தெரியாமலே இருக்கும். அந்த லிஸ்ட்ல இருக்கும் பாடல் இது.

" மீன்கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்
மீன்கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்
ரதியோ விதியின் பிரிவில் மதனோ ரதியின் நினைவில்
உறவின் சுகமே இரவே தருமே
காதலர் தேவனின் பூஜையில் நாளினில்.. "




படம் : பகல் நிலவு
பாடல் : வாராயோ வான்மதி..
பாடியவர் : ரமேஷ், வாணி ஜெயராம்*
பாடலாசிரியர் : வாலி*

இந்த பாடலை பாடியிருப்பவர் ரமேஷ். பொதுவா இந்த மாதிரி பாடல நம்ம SPB சூப்பரா பாடுவாரு. இந்த பாட்டுல ரெண்டாவது சரணத்தில "நானும் பாடும் பாடலே காதில் கேட்கவில்லையோ இல்லையோ.." னு வாணி ஜெயராம்* பாடிருப்பாங்க. அவங்களோட குரல் ரொம்ப நல்ல இருக்கும். ராஜா violin, Flute, தபேலாவ அருமையா பயன்படுத்தியிருப்பார். அருமையான பாடல் கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும்.




சங்கீத ஜாதிமுல்லை பாடல் பார்வைக்கு


Friday, April 16, 2010

என்னை தாக்கிய புயல் - II



ரஹ்மான் இசைல வெளிவந்த சில படங்கள் தோல்வி அடைஞ்சிருக்கலாம். ஆனாலும் அந்த படத்தில வர்ற சில பாடல்கள் இன்னும் நம்மள முனுமுனுக்க வைக்கறதே ரஹ்மானோட வெற்றி தான். பவித்ரா படத்தில் வரும் "செவ்வானம் சின்னப்பெண்.." புதிய மன்னர்கள் படத்தில் வரும் " நீ கட்டும் சேல.." புதிய முகம் படத்தில் வரும் " கண்ணுக்கு மை அழகு.." வண்டிசோழை சின்ராசு படத்தில் வரும் " இது சுகம் சுகம்.." லவ் birds படத்தில வரும் " மலர்களே மலர்களே.. " ஏன் இப்போ வந்த சக்கரகட்டி "மருதாணி.." பாட்டு வர்ற, ரஹ்மான் இசையமைத்த பாடல்கள் ரசிக்கும் படியாத்தான் இருக்கும். ( பரசுராம், அல்லி அர்ஜுனா படத்தில கூட ஒன்னு ரெண்டு பாட்டு தேறும் ).

இந்த பதிவில் ரஹ்மான் இசையில் சாகுல் ஹமீது, S.P.பாலசுப்ரமணியம், உன்னி கிருஷ்ணன், M G ஸ்ரீகுமார் பாடிய பாடல்கள்.

சாகுல் ஹமீது
-------------



சாகுல் ஹமீது கார் accident ல இறந்த போது ரஹ்மான் ரொம்பவும் வருத்தப்பட்டார்னு கேள்விபட்டுருக்கேன். தொடர்ந்து 93-94 வருசத்துல்ல ரஹ்மான் இசையமைத்த படங்களுக்கு நல்ல பாடல்கள பாடியிருக்காரு சாகுல் ஹமீது. ஜென்டில்மேன் படத்தில "உசிலம்பட்டி பெண்குட்டி..", திருடா திருடா படத்தில " ராசாத்தி ஏன் உசுரு..", வண்டிசோலை சின்ராசு படத்தில " செந்தமிழ் நாட்டு தமிழச்சியே..", உழவன் படத்தில " மாரி மழை பெய்யாதோ..", மே மாதம் படத்தில " மெட்ராஸ சுத்தி காட்ட..", கிழக்கு சீமையிலே படத்தில " எதுக்கு பொண்டாட்டி..", கருத்தம்மா படத்தில " பச்சைக்கிளி பாடும்.. " பாடியிருந்தார்.

மாரி மழை பெய்யாதோ


S.P.பாலசுப்ரமணியம்
-------------------



சமிபத்துல நடந்த ஒரு பாராட்டு விழாவுல " ரஹ்மான எனக்கு 30 வருசமா தெரியும். அப்போ எப்படி இருந்தாரோ அப்படி தான் இப்பவும் இருக்காருன்னு" SPB சொல்லிருப்பாரு. ரஹ்மானுக்கு SPB நிறைய நல்ல பாட்டு பாடியிருக்காரு. எனக்கு பிடித்த சில பாடல்கள்.. " காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே..", " மின்னலே நீ வந்ததேனடி என் கண்ணிலே..", " தொட தொட மலர்ந்ததென்ன பூவே ", " என் காதலே என் காதலே என்னை என்ன செய்ய..", " என்னை காணவில்லையே நேற்றோடு..", " காதலென்னும் தேர்வெழுதி..", " வெள்ளி மலரே வெள்ளி மலரே.. ".

என் காதலே என் காதலே


உன்னி கிருஷ்ணன்
-----------------



முதல் பாடலான "என்னவளே அடி என்னவளே.." பாட்டுக்கு தேசிய விருது வாங்கியவர் உன்னி கிருஷ்ணன். இவர் வாய் வச்ச " சோனியா சோனியா.. " பீட் சாங் கூட Melody யா தான் கேட்குது. அவ்வளவு இனிமையான குரல் இவருடையது. " காற்றே என் வாசல் வந்தாய்..", " தென்றலே தென்றலே..", " தென்மேற்கு பருவ காற்று..", " ரோஜா ரோஜா .. ", " மார்கழி திங்கள்..", " பூவுக்குள் ஒளிந்திருக்கும்.." , " காலையில் தினமும் கண்விழித்தால்..". எல்லாம் Sweet Melodies.

என்னவளே அடி என்னவளே


M G ஸ்ரீகுமார்
-----------



பிரபல மலையாள பாடகரான M G ஸ்ரீகுமார், ரஹ்மானோட இசைல என் சுவாச காற்றே படத்தில " சின்ன சின்ன மழை துளியை.." பாடல பாடியிருப்பாரு. தாஜ் மஹால் படத்தில வர்ற " கரிசல் தரிசில் " பாட்ட சித்ராவோடு சேர்ந்து செமயா பாடியிருப்பாரு. தாஜ் மஹால் படம் ரிலீஸ் ஆனா நேரம் இந்த பாட்டுல வர்ற " மேகாத்து மூலயில மேகமில்ல மின்னலில்ல பூமி நெனஞ்சிருக்கு" பீட்டு தான் Advertisment ல வரும்.

கரிசல் தரிசில்



"என்னை காணவில்லையே நேற்றோடு.." வீடியோ பாடல்




Wednesday, April 14, 2010

சங்கத்தில் பாடாத கவிதை - ஆட்டோ ராஜா (1982 )




2006 -2007 ஆம் ஆண்டு சென்னைல வேலை இல்லாம சுத்திகிட்டு இருந்த காலத்துல ஆறுதலா இருந்தது இளையராஜாவோட பாடல்கள் தான்.. இரவு எல்லா பன்பலையிலும் நம்ம ராஜாவோட பாட்டு தான் விதவிதமான வர்ணனைகளோடு பாடிட்டிருக்கும். அப்படி ஒரு நாள் கேட்ட பாடல் தான் "சங்கத்தில் பாடாத கவிதை". ராஜா இந்த பாட்ட ஜெயா டிவி concert ல ஹம் பண்ணிருப்பாரு. ஸ்கூல் படிக்கும் போது நண்பர்களோடு பாட்டு புஸ்த்தகம், பாட்டுக்கு பாட்டுனு பாடலோடே இருந்ததுனால படம் பேரு ஆட்டோ ராஜான்னு கண்டு பிடிச்சிட்டேன்.


நானும் அண்ணனும் இந்த பாட்ட டவுன்லோட் பண்ணலாம்னு தேடுதல் வேட்டைல Google ல இறங்குனோம். ஆட்டோ ராஜான்னு போட்டா ஏதோ சிரஞ்சீவி படம் வருது. ஒவ்வொரு நேரம் பண்பலைல "சங்கத்தில் பாடாத.." ராஜா குரல் வந்தவுடனே, என்னோட 6600 போண்டா செட்ல ரெகார்ட் பண்ணி வச்சிக்கிருவேன். கேட்டு பாப்பேன் ஒரே இரைச்சல இருக்கும். இப்படி சில நாள் போச்சு.

Youtube ல எனக்கு அக்கௌன்ட் இருந்தது. அப்பப்ப எதாவது நல்ல video songs டவுன்லோட் செஞ்சுக்குவேன். Youtube லையும் நம்ம பாட்டு இல்லை. கொஞ்சம் site ல தமிழ் வீடியோ songs, லொள்ளு சபா எல்லாம் இருந்தது. நமக்கு தேவையான சரக்கும் அங்க இருந்துச்சு ஒடனே லவட்டிகிட்டு வந்திட்டேன். யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்னு Youtube ல upload பண்ணிட்டேன். நான் google ல தேடும் போது பயன்படுத்தினதே "சங்கத்தில் பாடாத கவிதை - ஆட்டோ ராஜா (1982 )" Title ல கொடுத்தேன். இந்த ரெண்டரை வருசத்துல 131000 க்கும் அதிகம் பேர் பார்த்திருக்காங்க.




இசை : இளையராஜா
கவிஞர்: புலமைபித்தன்*
பாடியவர்கள்: இளையராஜா, S .ஜானகி


தமிழ் சங்கத்தில் பாடாத கவிதை - இதை
அங்கத்தில் யார் தந்தது
சந்தத்தில் மாறாத நடையுடன் என் முன்னே யார் வந்தது

கை என்றே செங்கந்தல் மலரை
நீ சொன்னால் நான் நம்பவோ
கால் என்றே செவ்வாழை இணைகளை
நீ சொன்னால் நான் நம்பிவிடவோ
மை கொஞ்சம்
பொய் கொஞ்சம்
கண்ணுக்குள் நீ கொண்டு வருவாய்
காலத்தால் மூவாத உயர் தமிழ்

அந்திபோர் காணாத இளமை
ஆடட்டும் என் கைகளில்
சிந்தித்தேன் செந்தூர இதழ்களில்
சிந்தித்தேன் பாய்கின்ற உறவை

அந்திபோர்..
கண்ணுக்குள் என்னென நளினம்
காலத்தால் மூவாத உயர் தமிழ்

ஆடை ஏன் உன்மேனி அழகை
ஆதிக்கம் செய்கின்றது
நாளைக்கே ஆனந்த விடுதலை
காணட்டும் காணாத உறவில்
கை தொட்டும் மெய் தொட்டும்
காமத்தில் தூங்கத விழியும்
சந்திப்பில் என்னென்ன நயம் தமிழ்

சங்கத்தில் பாடாத..

Wednesday, April 7, 2010

வைரமுத்துவின் கவிதையே பாடலாக

2004 ஆம் ஆண்டு வெளியான வைரமுத்துவின் கவிதையே பாடலாக இசைத்தொகுப்பில் எனக்கு பிடித்த இரண்டு கவிதை பாடல்களை உங்களுக்காக Upload செய்துள்ளேன்.




கவிதை : மரம்
கவிதை குரல் : வைரமுத்து
இசை : இனியவன்
பாடியவர்கள் : SPB, S.ஜானகி

இந்த கவிதையில் எனக்கு பிடித்த வரிகள்

" பிறந்தோம் தொட்டில் மரத்தின் உபயம்
நடந்தோம் நடைவண்டி மரத்தின் உபயம்
எழுதினோம் பென்சில் பலகை மரத்தின் உபயம்
மணந்தோம் மாலை சந்தனம் மரத்தின் உபயம்
கலந்தோம் கட்டில் என்பது மரத்தின் உபயம்
இறந்தோம் சவப்பெட்டி பாடை மரத்தின் உபயம்
எறிந்தோம் சுடலை விறகு மரத்தின் உபயம்
மரந்தான் மரந்தான் எல்லாம் மரந்தான்
மறந்தான் மறந்தான் மனிதன் மறந்தான் "






கவிதை : இலையில் தங்கிய துளிகள்
கவிதை குரல் : வைரமுத்து
இசை : இனியவன்
பாடியவர்கள் : SPB

இந்த கவிதையில் எனக்கு பிடித்த வரிகள்

" நகரா மரங்கள் நகர்வதாகவும் நகரும் வாகனம்
நிலைகொண்டிருப்பதாகவும் நீளப்பொய் சொல்கிறது நெடுஞ்சாலை.."

" காலம் தன் சவுக்கை பூக்கள் மீது சொடுக்காமல் இருக்கலாம்"

"பூச்சரமிட்ட புகைப்படம் சொல்லியது உன் அம்மாவின் மரணம்
சரத்தின் சருகு சொல்லியது உன் பொருளாதாரம்"

"கார் கதவு சாத்த வந்த கணவன் சொன்னான்..
"நீங்களே அவளுக்கு தாலி கட்டியிருக்கலாம்"
உன் போல் பெண்மக்கள் ஊருலகில் எத்தனையோ
காதல் உற்ற செய்தியை காதலனுக்கு சொல்லாமல்
கணவற்கு சொன்னவர்கள்"

Thursday, March 25, 2010

எனக்கு பிடித்த யேசுதாஸ், ஜெயச்சந்திரன் பாடல்கள்

நான் ரசிச்சு கேட்கிற சில பாடல்கள உங்களோடு பகிரலாம்னு தான்..



படம் : அவள் அப்படித்தான்
இசை : இளையராஜா
பாடல் : உறவுகள் தொடர்கதை..

கொஞ்சம் சோகமா இருந்த இந்த பாட்ட கேட்பேன் ஆறுதலா இருக்கும்.. " உன் நெஞ்சிலே பாரம்.. எதற்காகவோ ஈரம்.. கண்ணீரை நான் மாற்றுவேன்.. வேதனை தீரலாம்.. வெறும் பனி விலகலாம்.. ".



படம் : ஸ்ரீ ராகவேந்திரா
இசை : இளையராஜா
பாடல் : ஆடல் கலையே ..

ராஜாவோட இசைல நான் ரொம்ப விரும்பி கேட்கிற பாடல். யேசுதாஸ் அவ்வளவு அற்புதமா பாடியிருப்பாரு. வீணை மிருதங்கத்த ராஜா அழகா பயன்படுத்தியிருப்பாரு..





படம் : சிந்து பைரவி
இசை : இளையராஜா
பாடல் : பூமாலை வாங்கி..

ராஜா அதிகமா பயன்படுத்துற வாத்தியம் Violin, Flute தான். இந்த பாட்டுல violin, Flute, வீணைய நல்லா பயன்படுத்தியிருப்பாரு.. "நேற்று சபதம் எடுத்துவிட்டான் குடிக்கின்ற கோப்பையை உடைத்துவிட்டான்.. மீண்டும் அவள் முகம் நினைத்து விட்டான் சபதத்தை அவன் இன்று உடைத்துவிட்டான்"
வைரமுத்துன்னு நெனைக்கிறேன்..






படம் : கடலோர கவிதைகள்
இசை : இளையராஜா
பாடல் : கொடியிலே..

ஜானகியோடு இந்த பாட்ட ஜெயச்சந்திரன் பாடியிருப்பாரு.. அருமையான இசை. அழகான வரிகள்.



படம் : மே மாதம்
இசை : ரஹ்மான்
பாடல் : என் மேல் விழுந்த..

சித்ராவுடன் சேர்ந்து பாடியிருப்பார் ஜெயச்சந்திரன். மென்மையான பாடல்.



படம் : பென்பட(1975)
இசை : R.K.Shekar, A.R.Rahman
பாடல் : வெள்ளித்தேன் கிண்ணம் போல்..

ஜெயச்சந்திரன் பாடிய இந்த மலையாள பாடலை, ரஹ்மான் தன் 9 வயதில் அப்பாவோடு சேர்ந்து இசையமைத்தார்னு சொல்லுறாங்க.. நம்புவோமாக..

Wednesday, March 10, 2010

என்னை தாக்கிய புயல் - I

90'களில் ரஹ்மான் தன் இசைப் பயணத்தை தொடங்கிய போது அவரிடம் அனுபவமாக இருந்தது, இளையராஜாவிடம் கொஞ்ச காலம் Keyboard வாசித்தது. 84-88 வருடங்களில் நண்பர்களுடன் சேர்ந்து 'Roots', 'Magic' ஆகிய band இல் இணைந்து இசையமைத்தது. Tantex, MRF, Leo Coffee போன்ற விளம்பரங்களுக்கு இசையமைத்ததுவே.



70 களின் தொடக்கத்தில் நுழையவே முடியாத மலையாள இசை உலகத்தில் போராடி நுழைந்து, அந்த காலத்திலேயே நல்ல வாத்தியங்களை பயன்படுத்தி பாடல்களை தந்தவர் ரஹ்மானின் தந்தையார் R.K.Shekar. அவரின் ஆசிர்வாதமும் ரஹ்மானின் அயராத உழைப்பும் தான் இன்று அவரிடம் வரிசைகட்டிகொண்டு விருதுகள் வரக்காரணம்.



1992 ஆம் ஆண்டு தமிழில் ரோஜா படத்தின் மூலம் ரஹ்மானை மணிரத்னம் அறிமுகப்படுத்தினார். சின்ன சின்ன ஆசை என்று அறிமுகமான முதல் படத்திலே தேசிய விருது வாங்கியவர் ரஹ்மான்.

உன்னி கிருஷ்ணன், சாகுல் ஹமிது, ஸ்ரீனிவாஸ், ஹரிணி என்று இவர் அறிமுகப்படுத்திய பாடகர்கள் ஏராளம். ஹரிஹரன், உன்னி மேனன், சங்கர் மகாதேவன் போன்ற சிறந்த பாடகர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த பெருமையும் ரஹ்மானையேச் சேரும்.



Rangeela படத்தில் வரும் Pyar Ye Jaane என்ற பாடலை பாடிய மராத்திய பாடகர் Suresh Wadkar முதல் ஆரோமலே பாடிய மலையாள பாடகர் Alphons Joseph வரை நான் ரசித்த ரஹ்மான் பாடல்களையும், பாடகர்களையும் பற்றி பகிரவே இந்த பதிவு.

இந்த பதிவில் யேசுதாஸ், ஜெயச்சந்திரன் மற்றும் ஹரிஹரன் பாடிய பாடல்கள்.



ரஹ்மானின் இசையில் யேசுதாஸ் சில பாடல்களைப் பாடியது நிச்சயம் ரஹ்மானுக்கு பெருமை தான். "வெண்ணிலாவின் தேரில் ஏறி", "பச்சை கிளிகள் தோளோடு", "நெஞ்சே நெஞ்சே", "கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா"ணு நல்லாவே பாடியிருப்பாரு..

எனக்கு சில பாடல்களை கேட்கும் போது இந்த பாட்ட பாடுறவரு ஜெயச்சந்திரனா இல்ல யேசுதாஸான்னு குழப்பமா இருக்கும். இவரோட voice எனக்கு ரொம்ப பிடிக்கும். மே மாதம் படத்தில் வரும் "என் மேல் விழுந்த மழைத்துளியே" பாடலை சித்ராவுடன் பாடியிருப்பார். "கொல்லையில தென்னை வைத்து", "கத்தாளங் காட்டு வழி கல்லுபட்டி", "ராஜ்யமா இல்லை இமயமா", "ஒரு தெய்வம் தந்த பூவே"ன்னு நல்ல பாடல்கள பாடி இருக்காரு.

வித்யாசாகர் மூலம் தமிழுக்கு அறிமுகமான ஹரிஹரன் சொல்லிக்கொள்ளும் படிய அமைந்த முதல் பாடல் ரோஜா படத்தில் வரும் "தமிழா தமிழா நாளை நம் நாடே". சாதனா சர்கமுடன் இணைந்து பாடிய "உதயா உதயா உளறுகிறேன்", " வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணை தாண்டி வருவாயா". அனுராதா ஸ்ரீராமுடன் பாடிய "அன்பே அன்பே கொள்ளாதே". சித்ராவுடன் பாடிய "மலர்களே மலர்களே இது என்ன கனவா", ஹரிணியுடன் பாடிய "டெலிபோன் மணிபோல் சிரிப்பவள்" என்று ஹரிஹரனுடைய பட்டியல் கொஞ்சம் நீளம் தான்.

ரஹ்மானின் இசையில் Delhi 6 படத்தில் வரும் Masakali Masakali பாடல் உங்கள் பார்வைக்கு.



அடுத்த பதிவில் SPB, உன்னி கிருஷ்ணன், சாகுல் ஹமிது, ஹரிணி பாடிய ரஹ்மான் பாடல்கள்.

விரைவில்:

"ஒயிலா பாடும் பாட்டுல" என்ற பாடலுக்கு ஆதித்யனுடன் இசையமைத்தவர். காதல் தேசம் முதல் பல படங்களுக்கு ரஹ்மானிடம் உதவியாளராக இருந்தவர், இன்று பலருடைய Caller Tune னாக இருப்பது இவருடைய சிறந்த பாடல்களே. "என்னை தாக்கிய மின்னல்" விரைவில்...

Saturday, March 6, 2010

விண்ணைத்தாண்டி வருவாயா - திரை விமர்சனம்



கௌதம் மேனன் படத்துல கதாநாயகன் கதைய அழக Narrate பண்ணி பார்வையாளர்கள பத்து நிமிசத்துல கதைல ஒன்ற வச்சிடுவாரு. அதே மாதிரி ஹீரோ ஹீரோயின பார்த்த அடுத்த நொடியே (Love at first sight) உருகி பாட ஆரம்பிச்சிடுவாரு. அழகிய தீயே என்னை.. முன்தினம் பார்த்தேனே.. VTV'ல "ஏன் இதயம் உடைத்தாய் நொறுங்கவே என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே Hosana". இது அவரோட ஸ்டைல்.

A.R.Rahman னோட கிடார் மியூசிக்கோடு.. மனோஜ் பரமஹம்ச கேமராவின் வழியில்.. காதல் நம்மள போட்டு தாக்கனும் தலைகிழ திருப்பனும் நிலைய இருக்கணும் அது தான் லவ்னு நம்ம ஹீரோ Narrate பண்ணி ஆரம்பமாகுது படம்.

ஜெஸ்ஸியா த்ரிஷா, இந்த கேரக்டர் பற்றி சொல்லனும்ன.. பொதுவா பசங்களுக்கு பொண்ணு அழகா இருந்த இவ நம்ம Life fullல இருந்த எப்படி இருக்கும்னு தான் நினைப்பாங்க ஆனா பொண்ணுங்க Calculative mind'டோடு தான் இருப்பாங்க. இருக்கணும். கார்த்திக்கா சிம்பு Asst. Director'a நடிச்சிருக்கார்.

தெளிஞ்ச நீரோடைய போற ஜெஸ்ஸி வாழ்கையில கார்த்திக் வர்றான். உன்னை எனக்கு புடிச்சிருக்கு ஆனா எனக்கு வேண்டாம். நாம ஒன்னு சேர மாட்டோம். இந்த காதல் தோல்வில தான் முடியும்னு ஜெஸ்ஸி சொல்லியும் கார்த்திக் தொடர்ந்து தன்னுடைய காதல்ல வெற்றி பெற முயற்ச்சி செய்றாரு. காதலில் வெற்றி பெற்றாரா. குழப்பமான மனநிலையில் இருந்த ஜெஸ்ஸி தன் காதலனுக்காக வீட்டை தாண்டி வந்தாரா. Climax'ல ஜோடி சேர்ந்துச்சான சேர்ந்துச்சு ஆனா அது எந்த ஜோடின்னு வெண்திரையில பாருங்க..

படத்தில் என்னை கவர்ந்தவை:

குழப்பமே இல்லாம நூல் புடிச்சாப்ள சொல்லிருக்கும் கதை. சொன்னவிதம்.

பார்வையாளனின் கண்களை உறுத்தாத கேமரா கோணம். ஈரம் படத்துல்ல வாங்குன நல்ல பேர தக்க வச்சுகிட்டார்.

சிம்பு, த்ரிஷா நடிப்பு.

தாமரையின் பாடல் வரிகளுக்கு ரஹ்மானின் அற்புதமான இசை.

ஹோசன, ஓமணப்பெண்ணே பாடலும் படமாக்கிய விதமும் (Train Episode). த்ரிஷாவ ரொம்ப அழகா காட்டியிருப்பாங்க.

ஸ்ரேயா கோஷல், ரஹ்மான் பாடிய " ஒரு நாள் சிரித்தேன் மறுநாள் வெறுத்தேன் உனை நான் கொள்ளாமல் கொன்று புதைத்தேன் மன்னிப்பாயா.. உனை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன் " அந்த situation 'னுக்கு தேவையான feel கொடுத்தது.

ஆரோமலே ரொம்ப எதிர்பார்த்தேன். It's ok.

ரஹ்மானின் பின்னணி இசையும் ஆங்காங்கே ஹைக்கூ கவிதை போல வரும் வசனங்களும் படத்திற்கு இன்னும் அழகு..

சிம்பு: உன்ன ட்ரைன்ல பார்த்த உடனே friendsa நாம இருப்போம்னு சொன்னதெல்லாம் உடைஞ்சு போச்சு.. This is love.. I am crazy about you.. and mad about you.. இந்த சீன் ரொம்ப நல்ல எடுத்திருப்பாரு..

த்ரிஷா: உன் கண் வழிய என்ன யாரும் பார்க்கல போல..

சிம்பு: எதாவது புடிக்கலனா வேம நடந்து போயிடுவ அவள front'ட விட back'ல தான் அதிக தடவ பார்த்திருக்கேன். Theatrela என்ன புரிஞ்சாங்கனு தெரியல அந்தக் கத்து..

சிம்பு: இப்ப கூட எல்லாம் முடிஞ்சு போச்சுன்னு நினைச்சேன்.. நினைக்காத எல்லாம் முடிஞ்சு தான் போச்சுன்னு சொன்னா.

சிம்பு: காதல் ஒரு வலி. தேடி போய் யாரையும் லவ் பண்ண முடியாது அதுவா நடக்கணும் நம்ம போட்டு தாக்கனும். ஆரம்பத்தில வந்த அதே வரிகளோடும், நம் இதயத்தில் கொஞ்சம் வலிகளோடும் படம் நிறைவாகும்.

வாழ்த்துக்கள் கெளதம் மேனன்.